நதிகளை இணைக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நதிகளை இணைக்க வலியுறுத்தல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:தேசிய நதிநீர் கமிஷன் அமைத்து நதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என மதுரையில் நடந்த தென்னிந்திய வெள்ளாளர் சங்க ஆண்டுவிழாவில் வலியுறுத்தப்பட்டது.முதுநிலை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் நாகராஜன், துணை தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் பொன்னுச்சாமி வரவேற்றார்.
மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., தியாகராஜன், திரைப்பட தயாரிப்பாளர் ராஜன், வ.உ.சி.,யின் பேரன் சிதம்பரம், மாநில பொது செயலாளர் கோவிந்தராஜன், நாகசிவா பாலிடெக்னிக் நிறுவனர் நமச்சிவாயம், நாகலிங்கம், ஆன்மிக செம்மல் மாரியப்பன், வ.உ.சி., பேரவை நிர்வாகி முருகேசன் பங்கேற்றனர்.வ.உ.சி.,க்கு சென்னையில் மணிமண்டபம் கட்டவும், அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடுதல், பார்லியில் அவர் சிலையை நிறுவ வேண்டும். கர்நாடகா, ஆந்திராவில் தடுப்பணை கட்ட மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை