டெங்கு ஒழிப்பில் கவனம் செலுத்துங்கள் டாக்டர்களுக்கு மாநகராட்சி அறிவுரை| Dinamalar

டெங்கு ஒழிப்பில் கவனம் செலுத்துங்கள் டாக்டர்களுக்கு மாநகராட்சி அறிவுரை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : 'டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில், டாக்டர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சைக்கு வருவோர் எந்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் கண்டு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்' என, கோவை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, கோவையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி, இதுவரை, 22 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியான குறிச்சி, குனியமுத்துார், போத்தனுார் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, சிகிச்சைக்கு வருவோர் அதிகமாக இருப்பதால், சுகாதாரப் பணிகளை முடுக்கி விட உத்தரவிடப்பட்டு உள்ளது.மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி தலைமையில், போத்தனுாரில் உள்ள வார்டு அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது; நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், உதவி மற்றும் இளம் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சூபர்வைசர்கள் பங்கேற்றனர்.கொசு ஒழிப்பு பணிக்கு தலா, 3 பேர் வீதம், வார்டுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவினரும் நாளொன்றுக்கு, 70 வீடுகளில் ஆய்வு செய்து, 'அபேட்' மருந்து தெளிக்க வேண்டும். கொசுப்புழு உருவாவதற்கான காரணிகள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.குடிநீர் வினியோகத்தை பொறியியல் பிரிவினர் முறைப்படுத்த வேண்டும். தொட்டிகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதோடு, குளோரினேசன் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். சரியான விகிதத்தில் குளோரின் பவுடர் கலக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
வீடு வீடா போங்க!நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் பேசுகையில், ''குப்பை சேகரிக்க வீடு வீடாகச் செல்லும் துப்புரவு தொழிலாளர்கள், யாருக்கேனும் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என கேட்க வேண்டும். தொடர்ச்சியாக நான்கு நாட்கள் குப்பை போட யாராவது வராவிட்டால், அவர்களது வீட்டுக்குச் செல்ல வேண்டும். காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா, வெளியூர் சென்றிருக்கிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்தி, சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.