பாரதத் தாயின் மணிமகுடம் 'குமரி': துணைவேந்தர் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரதத் தாயின் மணிமகுடம் 'குமரி': துணைவேந்தர் பேச்சு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை:''கன்னியாகுமரி மாவட்டம் பாரதத் தாயின் மணிமகுடமாக திகழ்கிறது, குமரி மக்கள் நாட்டுபற்றில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்'' என, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை பேசினார்.மதுரையில், மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையின் 13ம் ஆண்டு விழா நடந்தது. துணைவேந்தர் பேசியதாவது: தடம் பார்த்து நடக்கும் மனிதர்கள் சாதாரண மனிதர்கள், தடம் பதித்து நடக்கும் மனிதர்களே சாதனையாளர்கள். அந்த வகையில் குமரி மக்கள் கல்வி, மருத்துவம், ஆசிரியர் என பல துறைகளில் முத்திரை பதிப்பவர்கள். பெற்றோர்கள் ஏழையாக இருந்தாலும், குழந்தைகள் தங்கள் அறிவு திறமையால் அவர்களை செல்வந்தர்களாக மாற்றி, சாதனைகளை எதிர் கொண்டு லட்சியங்களை அடைய வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம் பாரதத் தாயின் மணிமகுடமாக திகழ்கிறது, குமரி மக்கள் நாட்டுபற்றில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். தொல்காப்பியர் போன்ற மகான்களை உருவாக்கிய ஊர். பிறர்க்கு ஒற்றை ஏணியாகவும், நமக்கு இரட்டை ஏணியாகவும் இருந்து, நாணல் போல் வளைந்து கொடுத்து வாழ வேண்டும். குமரி மக்கள், பிரதமர் மோடியின் துாய்மை இந்தியா, 'மேக் இன் இந்தியா' திட்டங்களை பின்பற்றி நம்நாட்டை முன்னேற்ற வேண்டும், என்றார்.டாக்டர் சுப்பிரமணியன் விழா மலரை வெளியிட, காமராஜர் பல்கலை மொழியில் துறைத் தலைவர் (ஓய்வு) ஆதித்தன் பெற்றுக் கொண்டார். அதிக மதிப்பெண், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி துணை முதல்வர் பிரேமலதா, பேரவைத் தலைவர் முத்தம்பெருமாள், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் செல்வன், பொறியாளர் கேசவன், புரவலர்கள் போஸ், ஏகநாத பிள்ளை, உறுப்பினர்கள் பங்கேற்றனர். ராமசந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை