முப்பருவ கல்வி முறையை மாற்றலாமே! - கோவையில் ஆசிரியர்கள் கருத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முப்பருவ கல்வி முறையை மாற்றலாமே! - கோவையில் ஆசிரியர்கள் கருத்து

Added : ஆக 14, 2017
Advertisement

கோவை : முப்பருவ கல்விமுறையால், மாணவர்களின் புத்தக சுமையோடு, நினைவுத்திறனும் குறைந்து விட்டதாக, ஆசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறையில் கிட்டத்தட்ட, 12 ஆண்டுகளுக்குப்பின், புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. அடுத்த கல்வியாண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு முதற்கட்டமாக, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இது குறித்து கோவையில் ஆசிரியர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. திருப்பூர், நீலகிரி உட்பட எட்டு மாவட்டங்களில் இருந்து, 25 ஆசிரியர்கள் பங்கேற்று, கருத்துகளை தெரிவித்தனர். இதில், 80 சதவீத ஆசிரியர்கள் முன்வைத்த கருத்து, முப்பருவ கல்வி முறை வேண்டாம் என்பதாகவே இருந்தது.பாடத்திற்கு பின்புறம் கேள்விகள் கொடுக்கப்படாமல், முழு பாடத்திட்டத்தையும் படிப்பது போன்றதொரு முறையை, கொண்டுவர வேண்டும். பள்ளி அளவிலான தேர்வுகளையும், பொது வினாத்தாள் முறையில் நடத்த வேண்டும். விடுமுறை எடுத்தாலும், வீட்டிலிருந்தபடியே படிக்கும் அளவுக்கு, 'இ- கிளாஸ்' முறை அமல்படுத்துதல், உள்ளிட்ட பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:சில தனியார் பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு களுக்கு, மதிப்பெண்களை மட்டும் கருத்தில் கொண்டு, நேரடியாக 10 மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்கள் உயர்கல்வியில் பின்தங்குவது தொடர்கதையாகி வருகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காண, 'புளூ பிரிண்ட்' முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அறிவியல் பாடத்தில், 40 சதவீதம் செய்முறை பகுதியாகவும், மீதமுள்ள 60 சதவீதம், கருத்துரு பகுதியாகவும் இருத்தல் அவசியம். முப்பருவ கல்விமுறையை, ஒன்பதாம் வகுப்பு வரை, பின்பற்றும் மாணவர்கள், பத்தாம் வகுப்பில், அனைத்து பாடங்களையும் படிக்கும் போது திணறுகின்றனர். புத்தக சுமையோடு, நினைவுத்திறனும் குறைந்து விட்டதால், பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த, பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது.தேர்ச்சி, தோல்வி என்ற குறியீட்டுக்கு பதிலாக, பாட வாரியாக, 'கிரேடு' முறையை அமல்படுத்தலாம். பொதுத்தேர்வு முடிவுகளில், கிரேடு படி, அதிக மதிப்பெண்கள் பெற்று விருப்ப பாடங்களை, உயர்கல்வியில் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கலாம். இது, பொதுத்தேர்வு முடிவுகளை முன்னிறுத்தி, மாணவர்கள் மத்தியில் எழும் தற்கொலை எண்ணங்களை தவிடுபொடியாக்கும். உடற்கல்வியியல் என்ற புதிய பிரிவை, பிளஸ்1 வகுப்பில் கொண்டு வந்தால், விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை