இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : 'கோவையில் காற்றின் வேகமும், பகல்நேர வெப்பமும் குறைவாக இருக்கும்; வானம் மேக மூட்டமாக காணப்படும்;மழைப்பொழிவு இருக்கும்' என, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.ஜூன் 3 முதல், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. நகர்ப்பகுதியில் பெரிய அளவில் பெய்யாவிட்டாலும் கூட, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்வதால், சிறுவாணி, பில்லுார் மற்றும் ஆழியாறு அணைகளுக்கு நீர் வரத்து காணப்படுகிறது.நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில், கோவை நகர்ப்பகுதியில் பெய்ய ஆரம்பித்த மழை விடியும் வரை கொட்டியது; நகரில் மட்டும், 20 மி.மீ., மழை பதிவாகி இருக்கிறது. புறநகரில், 6 முதல், 10 மி.மீ., வரை பதிவானது. இம்மழை இன்றும் தொடரும் என, வானிலை ஆராய்ச்சி மையத்தினர் கூறியுள்ளனர். வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், ''தென்மேற்கு பருவ மழை, அடுத்த மாதம் வரை பெய்யும். சராசரியாக, 190 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 60 மி.மீ., பெய்துள்ளது. இன்னும், 48 நாட்கள் இருக்கின்றன. மீதமுள்ள, 130 மி.மீ., மழை எதிர்பார்க்கலாம். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும். வானம் மேக மூட்டமாக காணப்படும்.காற்றின் வேகமும், பகல்நேர வெப்ப நிலையும் குறைந்திருக்கும். தற்போது, வெப்பச்சலனத்தால், மழைப்பொழிவு காணப்படுகிறது. இடைவெளி விட்டாலும், மீண்டும் மழை பெய்யும். நடப்பாண்டு எதிர்பார்க்கும் மழை கண்டிப்பாக கிடைக்கும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை