திருட்டு 'சிடி' விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருட்டு 'சிடி' விற்பனை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : கோவை, செட்டி வீதியை சேர்ந்தவர் முகம்மது ரபீக் (29). இவர், பீபீ வீதியை சேர்ந்த மாநகராட்சி வணிக வளாகத்தில், நகல் உரிமம் பெறாத புதிய 9 சினிமா படங்களின் சி.டி.,க்களை கைப்பற்றிய போலீசார், அவரை கைதுசெய்தனர்.அதேபோல, காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் மியூசிக்கல் கடையில், பத்து புதிய தமிழ் படங்களின், சி.டி., டி.வி.டி.,க்களை போலீசார் கைப்பற்றினர். மதுக்கரை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த கார்த்திக் (30) என்பவரை கைது செய்தனர். அதேபோல், அவிநாசி ரோட்டில், பீளமேடு டைடல் பார்க் அருகில், சட்டவிரோதமாக சினிமா திருட்டு சி.டி., விற்ற ஆவாரம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன், 26 கைது செய்யப்பட்டார். சத்தி சாலையில், டெக்ஸ்டூல் பாலத்தின் அருகில் திருட்டு வி.சி.டி., விற்பனையில் ஈடுபட்ட ரத்தினபுரியை சேர்ந்த அங்கமுத்து,60 கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விஐபி-2 திருட்டு வி.சி.டி.,க்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை