'அதுவும் இதுவும்' நூல் வெளியீட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அதுவும் இதுவும்' நூல் வெளியீட்டு விழா

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை : கோவை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் எழுதிய, 'அதுவும் இதுவும்' நுால் வெளியீட்டு விழா, விஜயா பதிப்பகம் சார்பில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அரங்கில் நடந்தது. முதல் நுாலை, விஜயகார்த்திகேயன் தாயார் உமா கண்ணன் வெளியிட, நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:அன்றாட வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை, நுாலாசிரியர் 14 தலைப்புகளில் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் நடை அழகாக உள்ளது. சிந்தித்து எழுதலாம்; ஆனால் அனுபவமில்லாமல் எழுத முடி யாது. தாமஸ் ஆல்வா எடிசன், 1,500க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டு பிடித்து காப்புரிமை வாங்கியுள்ளார். நியூயார்க்கில் அவரது நினைவு நாளான்று, ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துகின்றனர். அப்போது, ஸ்கிரீன் ஒன்றில், 'இப்படித்தான் உலகம் இருண்டு கிடந்தது; எடிசன் வந்ததால், உலகம் இருளில் இருந்து மீண்டது' என்ற வாசகம் தெரிகிறது. நுாலாசிரியர், பொறுமை பற்றி குறிப்பிட்டுள்ளார். காரணம், அவரே பொறுமையாக இருப்பது தான். கரும்பை பிழியும் போது, சக்கையாக நொறுங்கும்; ஆனால் அதன் சாறு இனிக்கும் என அழகாக குறிப்பிட்டுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.இவ்வாறு, ஞானசம்பந்தன் பேசினார்.முன்னதாக விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் வரவேற்றார். கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சிறுதுளி அறங்காவலர் வனிதா மோகன், விஜயகார்த்திகேயன் தந்தையும், சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலருமான கண்ணன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் காயத்ரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை