இளம்பெண்ணுக்கு மிரட்டல் கணவரின் நண்பர்கள் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளம்பெண்ணுக்கு மிரட்டல் கணவரின் நண்பர்கள் கைது

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை, தகாத வார்த்தைகளில் பேசி மிதித்ததோடு, கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு இளைஞர்கள், கைது செய்யப்பட்டனர்.கோவை புலியகுளம் பெரியார் நகரைச்சேர்ந்தவர் சத்யா,20. இவர் தனது கணவர் பிரதாப் உடன் சுங்கம் பை-பாஸ் சாலையில் உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, சுங்கம் பகுதி ஸ்ரீநகர் 2வது வீதியை சேர்ந்த சூர்யா,20, பழைய சுங்கம் ஏரிமேடு பகுதியை சேர்ந்த அருள்குமார் ஆகியோர் வழிமறித்துள்ளனர். முன்விரோதத்தின் காரணமாக, தகாத வார்த்தைகளில் பேசியவாறே, சத்யாவை மிதித்துள்ளனர். கத்தியைக்காட்டி மிரட்டியிருக்கின்றனர்.சத்யா ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்குப் பின் சூர்யா மற்றும் அருள்குமார் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும், சத்யாவின் கணவர் பிரதாப்பின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை