மாதிரி சாலை திட்ட வடிவமைப்பு சொதப்பியதால் ஒப்பந்தம் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாதிரி சாலை திட்ட வடிவமைப்பு சொதப்பியதால் ஒப்பந்தம் ரத்து

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை, : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் 'மாதிரி சாலை' அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரித்ததில், ஆலோசனை நிறுவனம் சொதப்பியதால், ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.கோவை ஆர்.எஸ்.புரத்தில் டி.பி.ரோடு, டி.வி.சாமி ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, சங்கனுார் ரோடு, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட ஆறு இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 'மாதிரி சாலை' அமைக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்தது. முதல்கட்டமாக, டி.பி. ரோடு மற்றும் டி.வி.சாமி ரோடுகளில், மாதிரி சாலை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தனியார் ஆலோசனை நிறுவனம் வழங்கிய, திட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒப்பந்தமும் விடப்பட்டது.கவுலி பிரவுன் ரோடு பகுதியிலும், டி.பி.ரோட்டில் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகிலும், தொலைத்தொடர்பு துறை ஒயர்கள் கொண்டு செல்ல, தனி கட்டமைப்பு ஏற்படுத்தும் பணி துவங்கப்பட்டது; 3 மாதங்களில் பணியை நிறைவு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., மற்றும் மின்வாரியத்தினர் ஒத்துழைப்பு இல்லாததால், மாதிரி சாலை பணி தொய்வடைந்தது.100 மற்றும், 150 வயதான மரங்களை பற்றி கவலைப்படாமல், பணியை அவசரகதியில் முடிக்க, ஒப்பந்ததாரர் முயன்றார். அப்பகுதியில் உள்ள, 160 மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்து, வேறு இடங்களில் நடலாம் என சிலர் கருத்து கூறினர். அவ்வளவு மரங்களையும் வெட்டி வீழ்த்த, சுற்றுச்சூழல் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் பேச்சு நடத்தியும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சம்மதிக்கவில்லை.அதன்பின், திட்ட வடிவமைப்பை மாற்றிக்கொடுக்க, திட்ட அறிக்கை தயாரித்த ஆலோசனை நிறுவனத்துக்கு, ஒரு மாதம் அவகாசம் வழங்கியது மாநகராட்சி. ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்காததால், அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. புதிதாக வேறொரு ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க, உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதுவரை, தற்போது தோண்டியுள்ள குழிகளை, மண் கொட்டி மூடவும், பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை