சுதந்திர போராட்ட தியாகிகளை காண ஆர்.எஸ்.புரம் அரசு பள்ளிக்கு வாங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர போராட்ட தியாகிகளை காண ஆர்.எஸ்.புரம் அரசு பள்ளிக்கு வாங்க!

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை : வ.உ.சி., சேவா அறக்கட்டளை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 271 தியாகிகளின் புகைப்படங்கள், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.வரும் 15ம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த, 230 தியாகிகளின் புகைப்படங்கள், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 41 தியாகிகளின் புகைப்படங்கள் என, 271 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, சுதேசி கப்பலின் மாதிரியும், வ.உ.சி.,யின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.வ.உ.சி., சேவா அறக்கட்டளை தலைவர் முத்துவேல் கூறியதாவது:சுதந்திர போராட்ட தியாகிகளை பள்ளி மாணவர்களும், பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். கடந்தாண்டு, கோவை மாவட்டத்தை சேர்ந்த தியாகிகளின் புகைப்படங்கள் மட்டும் இடம்பெற்றன. இவ்வாண்டு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 271 தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை, பொதுமக்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தலாம். அடுத்தாண்டு துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தியாகிகளின் புகைப்படங்களை சேகரித்து, காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, முத்துவேல் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை