கம்பு தானியத்தில் கூடுதல் இரும்பு சத்து டாக்டர் சிவராமன் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்பு தானியத்தில் கூடுதல் இரும்பு சத்து டாக்டர் சிவராமன் தகவல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை''அரிசியை விட கம்பு தானியத்தில் தான் 8 சதவீதம் கூடுதலாக இரும்பு சத்து உள்ளது,'' என, மதுரை மடீட்சியாவில் நடக்கும் 'ஆயுஷ்' மருத்துவ கண்காட்சியில் டாக்டர் சிவராமன் தெரிவித்தார்.அவர் பேசியதாவது: நவநாகரீக உணவு பழக்கத்தால் 80 வயதை எட்டுவது சந்தேகம் என இந்திய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலும் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியாவில் சென்னை 2 வது இடத்தில் உள்ளது. குறிப்பாக குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான உடலை பாதிக்கும் சிற்றுண்டிகள் இந்தியாவிற்கு வருகின்றன. அரிசியை விட, கம்பு தானியத்தில் தான் 8 சதவீதம் கூடுதல் இரும்பு சத்து உள்ளது. பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கின்றனர். இதற்கு இரும்பு சத்துள்ள கம்பு போன்ற தானியங்களை சாப்பிடலாம். அயோடின் உப்பு சேர்ப்பதின் மூலமே 'தைராய்டு' பிரச்னை ஏற்படுகிறது. 'வாட்ஸ் அப்' களில் வரும் மருத்துவம் சார்ந்த குறிப்புகள் பெரும்பாலும் தவறாக உள்ளன. 'வாட்ஸ் அப்' உளவியல் ரீதியான வியாதிக்கு நம்மை அழைத்து செல்கிறது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை