ஒரு கோடி வணிகம் ஒரு சதவீதம் வரி:வியாபாரிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு கோடி வணிகம் ஒரு சதவீதம் வரி:வியாபாரிகள் வலியுறுத்தல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை பலசரக்கு சில்லரை வணிகர்கள் சங்கத்தின் 70வது ஆண்டு விழா நடந்தது.உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம் பேசியதாவது: ஜி.எஸ்.டி.,யில் (சரக்கு மற்றும் சேவை வரி) 75 லட்சம் வரை செய்யும் வணிகத்திற்கு 1 சதவீதம் வரி கட்ட வேண்டும். இந்த 75 லட்சத்தை ஒரு கோடியாக உயர்த்திட வேண்டும்.
இதில் வரி கட்டிய, கட்டாத பொருட்களை சேர்க்காமல் வரி கட்டிய பொருட்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக வரி விகிதம் உள்ள பொருட்களின் வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு தரச்சட்டத்தில் நேர்மையான வணிகர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது, என்றார்.சில்லரை வணிகர்கள் சங்க தலைவர் பால்ராஜ், பொருளாளர் கருப்பையா, இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், வியாபாரிகள் சங்க கவுரவச் செயலாளர் வேல்சங்கர், தொழில் வணிக சிந்தனையாளர் முத்து, பங்கேற்றனர். விழா மலர் வெளியிடப்பட்டது, செயலாளர் கணபதி நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை