அங்கன்வாடி மைய பணியாளர்களை நியமிக்க முடிவு: கலெக்டர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மைய பணியாளர்களை நியமிக்க முடிவு: கலெக்டர் தகவல்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை:''மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அங்கன்வாடி மையங்களில் 820 முதன்மை, 94 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 730 உதவியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்,'' என, கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் தவிர), தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். முதன்மை மற்றும் குறு பணியாளர்களுக்கு 25 முடிந்த மற்றும் 35 வயதிற்கு மிகாதவர், 40 வயதிற்குட்பட்ட விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்கள் தகுதியுள்ளவர்கள். மாற்றுத்திறனாளிகள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதியினர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். வசிப்பிடத்திற்கு வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டையில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.
உதவியாளருக்கு 40 வயதிற்கு மிகாத விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர், மலைப்பகுதியினராக இருந்தால் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். இனவாரியான காலி பணியிடங்களை சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக., 16 முதல் 30க்குள் (சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள் தவிர்த்து) சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை