சீரமைப்பிற்கு காத்திருக்கும் கால்வாய்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீரமைப்பிற்கு காத்திருக்கும் கால்வாய்கள்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்கள், வாய்க்கால்கள் நீர் வரத்தையும், சீரமைப்பையும் எதிர்நோக்கி காத்திருக்கின்றன.நிலையூர் கால்வாய்கள் வழியாகவரும் வைகை அணை தண்ணீர் மற்றும் மழைநீர், கிளைக் கால்வாய்கள் வழியாக திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள கண்மாய்களை சென்றடையும்.
இக்கண்மாய்களின் தண்ணீர்மூலம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்தந்த பகுதி நிலத்தடி நீர் ஆதாரப் பகுதிகளாக இருப்பதும் இக்கண்மாய்களே.கிளைகால்வாய்களில்இருந்து பிரியும் வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு தண்ணீர் செல்லும். இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் நிலையூர் கால்வாய்களில் செடி, கொடிகள் காடு போன்று வளர்ந்து கிடக்கிறது. கிளை கால்வாய்கள், வாய்க்கால்கள் சேதமடைந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும் உள்ளன.
பல ஆண்டுகளாக கிளை கால்வாய்கள், வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டவில்லை. மழை துவங்கும் முன்பு இக்கால்வாய்கள், வாய்க்கால்கள் அனைத்தையும் துார்வாரி சீரமைக்க நடவடிக்கை தேவை. இல்லை யெனில் நீர்வரத்து காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துவிடும். கண்மாய்கள் நிரம்பாது. கண்மாய்கள் நிரம்பவில்லையெனில் விவசாயம் பாதிக்கப்படும்.இரண்டு ஆண்டுகளாக மழையில்லாததால் விவசாயம் முடங்கி விட்டது. மிகுந்த துன்பத்தில் உள்ளோம். தற்போது மழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது. இந்நிலையில் கண்மாய்கள் நிரம்பவில்லையெனில் இந்த ஆண்டும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். கிளை கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை சீரமைக்கவும், நிலையூர் கால்வாய்களில் வளர்ந்து உள்ள செடிகளை அகற்றவும் நடவடிக்கை தேவை, என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை