பள்ளி மைதானத்தில் மழைநீர்: மாணவர்கள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மைதானத்தில் மழைநீர்: மாணவர்கள் பாதிப்பு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாடிப்பட்டி:வாடிப்பட்டி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இங்கு மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி வெளியேற வழியில்லாமல், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் மைதானத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி சமையலறை பகுதி வழியாக ஒட்டான்குளத்திற்கு செல்ல பள்ளி சுற்றுச்சுவர் வரை மழைநீர் வாய்க்கால் கட்டப்பட்டது.
குறைந்த துாரம் மட்டுமே கட்டப்பட்டு உள்ள இந்த வாய்க்கால் வழியாக வரும் மழைநீர் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேற முறையான கட்டுமான பணியை மேற்கொள்ளாமல் சுற்றுசுவர் கீழ்பகுதியை உடைத்து வைத்துஉள்ளனர்.இதனால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் விழும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி வளாகத்திற்கு வெளியே பேரூராட்சி பகுதியில் சிமென்ட் தளம் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வளாகத்தில் இருந்து மழைநீர் ஓட்டான்குளம் செல்லும் பாதை சேதமடைந்துஉள்ளது. தேங்கும் நீரால் பல்வேறு பாதிப்புகள், காய்ச்சல் பரவி வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் தேங்கும் நீர் விரைவாக வெளியேற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை