3 விபத்துகளில் 4 பேர் பலி| Dinamalar

3 விபத்துகளில் 4 பேர் பலி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

* நாகமலை புதுக்கோட்டை: மதுரை கரிமேடு பாண்டித்துரை மகன் பால முருகன்,22. இவரது நண்பர் மோகன்,26. இருவரும் நேற்று முன்தினம் மாலை நாகமலைபுதுக்கோட்டை சென்று விட்டு டூவீலரில் மதுரை திரும்பினர். பாலமுருகன் டூவீலரை ஓட்டினார் (ஹெல்மெட் அணிந்திருந்தார்). புதுக்குளம் பிரிவு அருகே வந்தபோது எதிரில் வந்த தனியார் கல்லுாரி பஸ் இவர்கள் மீது மோதியது. இருவரும் படுகாயம்அடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மோகனும், பாலமுருகனும் நேற்று இறந்தனர். நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.* திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இருந்து நேற்று மதியம் 2:௦௦ மணியளவில் மரங்களை ஏற்றிக்கொண்டு லோடு வேன் மதுரை நோக்கி வந்தது. மேலக்காலை சேர்ந்த நம்பிராஜன், 31, ஓட்டினார். மரம் வெட்டும் தொழிலாளர்கள் அதே வேனில் பயணித்தனர். கீழமாத்துார் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ரோடு ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் மேலக்கால் செல்வம் மகன் பிரகாஷ்,17, உட்பட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள்அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பிரகாஷ் இறந்தார். நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.* செக்கானுாரணி: கருமாத்துார் அடுத்து கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரமன்,74. இவர் நேற்று முன்தினம் இரவு 9:௦௦ மணியளவில் செல்லம்பட்டியில் ரோட்டை கடக்க முயன்றபோது, உசிலம்பட்டி யில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதியது.படுகாயமடைந்த பரமன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். செக்கானுாரணி போலீசார் லாரி டிரைவர் ராஜேந்திரனை கைது செய்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.