மானாவாரி விதைப்பு தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி விதைப்பு தாமதம்

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

உசிலம்பட்டி:உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆடிப்பட்டத்தில் மழைப்பொழிவு குறைவின் காரணமாக மானாவாரி விதைப்பு பணிகள் தாமதமாகிறது.உசிலம்பட்டி ஒன்றியத்தில் சுமார் நான் காயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலப்பரப்பு உள்ளது. தொடர்ந்து பருவமழை பொய்த்ததால் விவசாய பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக முறையாக நடைபெறவில்லை.
இந்த ஆடிப் பருவத்தில் கிடைத்த மழையின் அளவு மிகவும் குறைவானதாக உள்ளது. கோடை உழவு செய்திருந்த பகுதிகளில் மட்டும் விதைப்பு பணிகள் நடந்துள்ளது. குறிப்பாக ஜோதில்நாயக்கனுார், மானுாத்து, அல்லிகுண்டம், எருமார்பட்டி பாறைப்பட்டி பகுதிகளில் ஓரளவு மழை கிடைத்ததை வைத்து பருத்தி, கடலை, பாசிபயறு, தட்டைபயறு, சோளம், கம்பு, குதிரைவாலி முதலியவற்றை விதைத்துள்ளனர்.இதே போல் திம்மநத்தம், உத்தப்பநாயக்கனுார் பகுதிகளிலும் பாசிபயறு, குதிரைவாலி, சோளம் முதலியவை பயிரிட்டுள்ளனர். சுமார் ஆயிரம் ஏக்கருக்குள் தான் விதைப்பு பணிகள் நடந்துள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து மழைப்பொழிவின் அளவு குறைந்துள்ளது. உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி பகுதிகளில் எந்த கண்மாய்க்கும் தண்ணீர் வரவில்லை. ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்ஒரு சில நாட்களிலேயே வற்றிப்போனது. ஆடி பட்டம் நிறைவாக ஓரிரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் தொடர் மழை கிடைக்காமல் விதைப்பு பணிகள் தாமதமாகிறது.தற்போது விதைப்பில் உள்ள பயிர்களுக்கும் அடுத்த பத்து பதினைந்து நாட்களுக்குள் மழை கிடைத்தால் மட்டுமே பயிர்கள் தாக்குப்பிடித்து வளரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை