மயக்க 'ஸ்பிரே' அடித்து 30 சவரன் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயக்க 'ஸ்பிரே' அடித்து 30 சவரன் கொள்ளை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் முரளி
கிருஷ்ணன், 45; தனியார் பொறியியல் கல்லுாரி பேராசிரியர். மனைவி கீதா, அரசு பள்ளி ஆசிரியை. இருவரும், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கினர்.
நள்ளிரவில், பலத்த இடியுடன் மழை பெய்ததை பயன்படுத்தி, கொள்ளையர்கள், முன்புற கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
படுக்கையறையில் துாங்கிய தம்பதி மீது, ஸ்பிரே மூலம் மயக்க மருந்தை அடித்து, பீரோவை உடைத்து, 30 சவரன் நகைகள், 5,000 ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு, 6 லட்சம் ரூபாய்.
காலையில் மயக்கம் தெளிந்து எழுந்த முரளி
கிருஷ்ணன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை