'தகவல் ஆணைய அமர்வு நியமனம் முறையாக நடைபெறவில்லை'| Dinamalar

'தகவல் ஆணைய அமர்வு நியமனம் முறையாக நடைபெறவில்லை'

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகள் மீதான புகார்களை விசாரிக்கும், நான்கு பேர் அடங்கிய அமர்வின் நியமனம் முறையாக நடக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட, ஆறு தேசியக் கட்சிகள், தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள், 2103ல் வந்தன. ஆனால், இந்தக் கட்சிகள், தகவல்களை அளிப்பதில்லை என, வழக்கறிஞர் ஆர்.கே. ஜெயின் என்பவர், மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பான புகார்களை, தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தலைமையிலான மூன்று பேர் அமர்வு, 2016, ஜூலையில் விசாரிக்க துவங்கியது. இந்த அமர்வில் இருந்த, பிமல் ஜுல்கா, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன்பின், இந்த அமர்வு செயல்படவில்லை. இது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்தில், ஆர்.கே. ஜெயின் வழக்கு தொடர்ந்தார். தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அரசியல் கட்சிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க, நான்கு பேர் அடங்கிய அமர்வை, தலைமை தகவல் கமிஷனர்,
ஆர்.கே.மாத்துார் நியமித்தார்.
'இந்த அமர்வின் நியமனம் முறையாக நடக்கவில்லை' என, வழக்கறிஞர் ஜெயின், மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சட்டத்தின்படி, ஒரு வழக்கை மற்றொரு அமர்வுக்கு மாற்றும்படி, விசாரணை நடத்தும் அமர்வுதான், கோரிக்கை வைக்கும். ஆனால், இதில் அவ்வாறு எந்த கோரிக்கையையும், மூன்று பேர் அமர்வு முன்வைக்கவில்லை. மூன்று பேர் அமர்வில் இருந்த ஸ்ரீதர் ஆச்சார்யலு, சட்டம் பயின்றவர். ஆனால், நான்கு பேர் அமர்வில் உள்ள எவருமே சட்டம் படிக்கவில்லை. ஏதோ மேம்போக்காக, ஒரு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அமைக்கப்படவில்லை. இது குறித்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பதிலளிக்கும்படி, தலைமை தகவல் ஆணையரை, டில்லி உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை