வரலாற்றை கரைத்து குடித்தவர்! - இவர் இப்படி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வரலாற்றை கரைத்து குடித்தவர்! - இவர் இப்படி

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (2)
Advertisement
வரலாற்றை கரைத்து குடித்தவர்! - இவர் இப்படி

துணை ஜனாதிபதியாக இருந்த, ஹமீது அன்சாரிக்கு ஒரு சிறப்பு உண்டு. துணை ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டு முறை இருந்தவர் என்ற பெருமையை, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்குப் பின் பெற்றுள்ளார். தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்தப் பெருமையை பெறுவாரா என்பதற்கு, இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. கடந்த, 2007ல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், துணை ஜனாதிபதியாக, முதல் முறையாக, ஹமீது அன்சாரி நிறுத்தப்பட்டார். பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட நஜ்மா ஹெப்துல்லாவை, 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். மீண்டும், 2012ல் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., சார்பில் நிறுத்தப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை, 252 ஓட்டுகளில் வெற்றி பெற்றார்.
இரண்டு முறையும், வேறு வழியில்லாமல் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. அவரது சிந்தனைகள், வெளியுறவு கொள்கைகள், அதில் உள்ள நிபுணத்துவம் போன்றவை, அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு காரணங்களாக அமைந்தன.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1937, ஏப்.,1ல் பிறந்தார். இருப்பினும், அவரது குடும்பம், உத்தர பிரதேசம் காஜிபுரைச் சேர்ந்தது. ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான அவர், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தார்.
ஆஸ்திரேலியா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா நாடுகளில், இந்தியத் துாதராகப் பணியாற்றினார். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அவர், சிறந்த கல்வியாளராகவும் திகழ்கிறார். வெளியுறவுக் கொள்கையில், குறிப்பாக மேற்கு ஆசியா விவகாரங்களில், அவருக்கு அதிக ஞானம் இருந்தது.
ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்த அவர், சில சந்தர்ப்பங்களில் எடுத்த முடிவுகள், அரசுக்கு ஆதரவாக அமைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 2011, டிச.,30ம் தேதி சபை நடந்து கொண்டிருந்தது.
அன்னா ஹசாரேயின் போராட்டத்தால், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் பார்லி., நடந்து கொண்டிருந்தது. சரியாக நள்ளிரவு, 12:00 மணிக்கு, சபையை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.
இது போன்ற சில சர்ச்சைகளில் சிக்கினாலும், நாட்டின் வரலாறு குறித்த தகவல்களை கரைத்துக் குடித்தவராக அவர் பார்க்கப்படுகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
14-ஆக-201717:49:09 IST Report Abuse
ravichandran எல்லாத்தையும் கரைத்து குடித்தவர் தான் என்னை செய்ய அனைத்தும் பேதியாகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-ஆக-201713:56:59 IST Report Abuse
rajan அடிப்படை ஞானம் இல்லாமல் மத சார்பாக இவர் கருத்து சொல்வது அத்தனை அழகல்ல. அறிவு வேறு ஞானம் வேறு என்பதற்கு இவர் உதாரணம். ஒருவேளை பாகிஸ்தான் பிரதமராக இருந்திருந்தால் அந்த நாடு நல்ல இருந்திருக்குமோ என்னவோ. இந்தியா சரிப்பட்டு வராது இவருக்கு. இந்த மண்ணின் வாசம் மாறுபட்டது என்னும் ஞானம் இவருக்கு இல்லையே. ஆயிரம் இருந்தும் நோ பீஸ் ஆப் ஞானம் இது தான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை