'தலாக்'கை எதிர்க்கும் புதிய மனு நிராகரிப்பு| Dinamalar

'தலாக்'கை எதிர்க்கும் புதிய மனு நிராகரிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: முஸ்லிம்களில், மும்முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
முஸ்லிம்கள், தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன; இதை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்து, மே, 18ல், தீர்ப்பை ஒத்தி வைத்தது.இந்நிலையில், தலாக் முறையானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி, குருதாஸ் மிஸ்ரா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு உத்தரவிட்டதாவது:
இந்தப் பிரச்னை குறித்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில், மிகத் தீவிரமாக விசாரணை நடத்தப்
பட்டுள்ளது. அதில் தீர்ப்பு அளிக்கும்போது, தற்
போதைய மனுவில் கூறப்பட்டுள்ள பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். அதனால், இந்த மனுவை தற்போதைய நிலையில் விசாரணைக்கு ஏற்க முடியாது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.