நிலச்சரிவில் பஸ் சிக்கி 45 பேர் பலி| Dinamalar

நிலச்சரிவில் பஸ் சிக்கி 45 பேர் பலி

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிலச்சரிவில் பஸ் சிக்கி 45 பேர் பலி

சிம்லா:ஹிமாச்சலப் பிரதேசத்தில், பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கிய இரண்டு அரசு பஸ்கள், 2,500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தன; இந்த விபத்தில், 45 பேர் பலியாயினர்.ஹிமாச்சலப் பிரதேசத்தில், காங்.,கை சேர்ந்த, வீர்பத்ர சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் இரவு, மணாலி நகரில் உள்ள சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரண்டு அரசு பஸ்கள், 2,500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கின.இந்த விபத்தில், 45 பயணியர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர். இவர்களில் பலரது நிலை வலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில், ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-ஆக-201710:40:29 IST Report Abuse
srisubram கன மழை பெய்யும்போது , மலை பாங்கான இடங்களில் பேருந்தை இயக்குவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் . மேலும் அணைத்து இடங்களிலும் , கூடுதல் எடை ஏற்றி செல்லும் , வாகனகளையும் (trucks ) தடை செய்தல் (குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் ) இதை நாம் தவிர்க்கலாம் .. இறந்தவர்கள் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை