'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'| Dinamalar

'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: 'ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும், ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிட, 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதி உடைய,
ஓட்டல்கள், மற்றும் மதுபான விடுதிகளுக்கு, 18 சதவீதம்,
ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. 'ஏசி' வசதி இல்லாத
ஓட்டல்களுக்கு, 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
எனினும், 'சில ஏசி ஓட்டல்களில், ஒரு தளத்தில் ஏசி பயன்பாடு இல்லை' என கூறி, 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.
இது குறித்து நேரடி வரிகள் வாரியம் கூறியதாவது:
ஏசி ஓட்டல்களில், ஒரு பகுதியில் மட்டும் ஏசி வசதி இல்லை என கூறி, 18 சதவீதத்திற்கு பதில், 12 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது. அங்கிருந்து, 'பார்சல்' உணவு வாங்கி சென்றாலும், அதற்கும், 18 சதவீத வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும். ஓட்டலில், ஒரு
குறிப்பிட்ட இடத்தில், ஏசி வசதி இருந்தாலும், அங்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.