வாடகை தாய் சட்டம் : பார்லி., குழு அதிருப்தி| Dinamalar

வாடகை தாய் சட்டம் : பார்லி., குழு அதிருப்தி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: 'திருமணமாகி ஐந்து ஆண்டுக்கு பின்பே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்பதை, ஓராண்டாக மாற்ற வேண்டும்' என, பார்லிமென்ட் குழு கூறியுள்ளது.
பல்வேறு காரணங்களால் குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது வர்த்தகமயமாகி உள்ளது. அதனால், இதில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், வாடகைத் தாய் கட்டுப்பாட்டு மசோதா, பார்லிமென்ட்டில் நிறை
வேறியது. இந்த மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலைக் குழு, பல்வேறு தரப்பினருடன் ஆய்வு, ஆலோசனை நடத்திய பின், தன் அறிக்கையை தயார் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணமாகி ஐந்து ஆண்டுக்குப் பின்பே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்பது, மிக நீண்ட காலமாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில், மிகவும் தாமதமாகத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இது போன்றவர்கள், நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அதனால், திருமணமாகி, ஓராண்டுக்கு பின், வாடகைத்தாய் முறையை பயன்படுத்த அனுமதிக்கலாம். கர்ப்பப்பை அகற்றப்படுவது போன்ற சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், எந்தக் கால கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. வாடகைத் தாய் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், மாற்று உதவியுடன் குழந்தைப்பேறு தொழில்நுட்ப சட்டத்தை முதலில் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.