ஜம்மு - காஷ்மீரில் ராணுவம் பதிலடி : 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

ஜம்மு - காஷ்மீரில் ராணுவம் பதிலடி : 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஆக 14, 2017
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில், பயங்கரவாதிகள், மூன்று பேர் கொல்லப்பட்டனர்; இந்த தாக்குதலின்போது, பயங்கரவாதி கள் சுட்டதில், வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்; அவர்களுக்கு பாக்., ராணுவம் உதவி செய்து வருகிறது. அவர்களுக்கு எதிராக, நம் ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில், பயங்கர வாதிகள் சிலர் ஊடுருவிஉள்ளதாக, பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது; இதைஅடுத்து, நேற்று முன்
தினம் அந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, உள்ளூரில் உள்ள பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், வீரர்கள் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.அதேசமயம், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்; மேலும், ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.இதையடுத்து, அந்த பகுதியில், கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பல மணிநேரம் நடந்த இந்த தாக்குதல், நேற்று காலை முடிவுக்கு வந்தது. அங்கு பதுங்கி இருந்த, மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில், புல்வாமா, குல்காம், சோபியான் ஆகிய மாவட்டங்களில், ஏழு மாதங்களில், 70 இளைஞர்கள், பயங்கர வாத அமைப்புகளில் சேர்ந்துள்ள தாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர். இந்த பகுதிகளில் இருந்து, இளைஞர்கள் அதிக அளவில் எல்லை தாண்டி சென்று, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்று வருவதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பாக்., அத்துமீறல் : ஜம்மு - காஷ்மீரில் பாக்., ராணுவம் நேற்று, மீண்டும் அத்துமீறல்களில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தில், கட்டுப் பாட்டு எல்லையை தாண்டி, அவர்கள் பீரங்கியால் சுட்டனர்; அதிகாலயில் துவங்கி, சில மணிநேரம் தொடர்ந்து தாக்குதல் நடந்தது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தமிழக வீரர் பலி : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான இளையராஜா, தமிழகத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர், சிவகங்கை மாவட்டம், கந்தனி கிராமத்தில் வசிக்கின்றனர். மற்றொருவரான, சுமேத் வாமன், மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். அவர்களது உடல்களை, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை