பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! : அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! : அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ''முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார்
கூறியுள்ளார்.

நாட்டின் துணை ஜனாதிபதியாக, 10 ஆண்டு பதவி வகித்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன்சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார், நாக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது:இந்தியாவில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்
கருதும் ஹமீது அன்சாரி போன்றவர்கள், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க, ஒரு நாட்டின் பெயரை சொல்ல வேண்டும். அந்த நாட்டுக்கு, ஹமீது அன்சாரி போன்றவர்கள் சென்று வாழலாம்.ஹமீது அன்சாரி கூறிய கருத்துக்கு, ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்கள், அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, மதச் சார்பற்றவராக திகழ்ந்த, அன்சாரி, பதவி போனபின், தீவிர முஸ்லிமாகி விட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை