ஓட்டம் எடுக்கும் பயங்கரவாதிகள்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓட்டம் எடுக்கும் பயங்கரவாதிகள்!

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் இருந்து, பயங்கரவாதிகளை விரட்டுவதே மத்திய அரசின் இலக்கு. செல்லாத நோட்டு அறிவிப்பு மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையால், பயங்கரவாதிகள் கடுமையான பண தட்டுப்பாட்டில் உள்ளனர். காஷ்மீரை பயங்கரவாத மையமாக வைத்திருந்த அவர்கள், தற்போது, காஷ்மீரை விட்டு ஓட துவங்கியுள்ளனர்.

அருண் ஜெட்லி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

ஊழல் இல்லாத இந்தியா!

புதிய இந்தியாவை உருவாக்கும் இயக்கம், ஊழலை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதற்காக, இளைஞர்கள், பெண்கள் உட்பட சமூகத்தின் பல பிரிவினரும் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம்; கல்லுாரிகள், பல்கலைகழங்களில் உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்; வரும், 2022க்குள் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.

பிரகாஷ் ஜாவடேகர், மத்திய அமைச்சர், பா.ஜ.,

கண் தானம் செய்வேன்!

உடல் உறுப்புகளை தானம் செய்வதை இயக்கமாக நடத்த வேண்டும். மது ஒழிப்பை போன்றே, இதையும் மக்கள் இயக்கமாக நடத்த வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்யும் விஷயத்தில், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இதற்கு முன்னோட்டமாக, கண் தானம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

நிதிஷ் குமார் , பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதாதளம்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை