பிரிந்த யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு | Dinamalar

பிரிந்த யானைகளை விரட்ட முடியாமல் தவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர்: ஓசூர், வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள யானைகள், தனித்தனியாக பிரிந்ததால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கடந்த மாதம், 28ம் தேதி, போடூர்பள்ளம் காப்பு காட்டுக்கு சென்றது. இந்த யானையை, வனத்துறையினர்
கண்காணித்து வந்த நிலையில், கடந்த, 9ம் தேதி, அதிகாலை, கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து, செட்டிப்பள்ளி காப்புக் காட்டுக்கு, நான்கு யானைகள் இடம் பெயர்ந்தன.
அவற்றை, கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டு
இருந்தனர். இந்நிலையில், யானைகள் தனித்தனியாக பிரிந்தன.இதில், ஒற்றை யானை, செட்டிப்பள்ளி காப்புக் காட்டில் உள்ள செக்காருலு வனப்பகுதியிலும், மற்றொரு ஒற்றை யானை பேரண்டப்பள்ளி காப்புக் காட்டிலும், மற்ற இரு யானைகள், பீர்ஜேப்பள்ளி - சினிகிரிப்பள்ளி இடையே உள்ள காப்புக் காட்டிலும் தஞ்சம் அடைந்துள்ளன. போடூர்பள்ளத்தில் முகாமிட்டிருந்த, ஒற்றை யானையை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.நான்கு யானைகள் தனித்தனியாக பிரிந்துள்ளதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.