ஓசூர் வனக்கோட்டத்தில் நக்சல் தேடுதல் வேட்டை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் வனக்கோட்டத்தில் நக்சல் தேடுதல் வேட்டை

Updated : ஆக 14, 2017 | Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஓசூர் , Hosur, நக்சல், Naxal,அதிரடிப்படை போலீஸ், Action force police,துப்பாக்கி,  gun, தமிழகம்,amil Nadu, கர்நாடகா ,Karnataka , ஆந்திரா , Andhra Pradesh,கிருஷ்ணகிரி, Krishnagiri, தெலுங்கானா ,  Telangana,எஸ்.ஐ ஆனந்தகுமார், SI Anandakumar,

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், நக்சல் நடமாட்டம் உள்ளதா என, அதிரடிப்படை போலீசார்,
துப்பாக்கியுடன் சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தமிழகம் - கர்நாடகா - ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு நக்சல் நடமாட்டம் உள்ளதா என்பதை, அதிரடிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். நக்சல் நடமாட்டம் இருந்தால், போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என, வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள், நக்சல்களை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளதால், அங்கிருந்து தப்பும் நக்சல்கள், இங்கு பதுங்க அதிக வாய்ப்புள்ளது.எனவே, எஸ்.ஐ., ஆனந்தகுமார் தலைமையிலான, கிருஷ்ணகிரி மாவட்ட அதிரடிப்படை வீரர்கள், 12 பேர் அடங்கிய குழுவினர், 15 நாட்களுக்கும் மேலாக, ஓசூர் வனக்கோட்டத்தில் சோதனை செய்து வருகின்றனர். வனப் பகுதியைஒட்டிய கிராமங்களில், துப்பாக்கியுடன், தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-ஆக-201710:45:05 IST Report Abuse
srisubram நக்ஸல்களை வேரறுக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை