இளம்பெண் கொலையில் போலீஸ் திணறல்| Dinamalar

இளம்பெண் கொலையில் போலீஸ் திணறல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கரூர்: கரூரில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்பு கிடைக்காததால், விசாரணையில் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், வளையாப்பட்டி, சித்தன் நகரை சேர்ந்தவர், ரூபா, 25. கரூரில் உள்ள தனியார் வங்கியில், கேஷியராக பணிபுரிந்தார். கரூர், காந்திபுரத்தில் உள்ள, மாதவன் என்பவரது வீட்டு மாடியில், தங்கியிருந்தார். இவர் கடந்த, 2014 ஏப்ரல், 5ம் தேதி காலை, வீட்டு மாடியில் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது உடலில் கை, கால் முகம் என, 10 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.இவ்வழக்கில், கடந்த, மூன்று ஆண்டுகளாக குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி சரக டி.ஐ.ஜி.,யாக பவானீஸ்வரி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ரூபா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த, 15 நாட்களாக தனிப்படை போலீசார், திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் விசாரித்தனர். ஆனால், போலீசார், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.