வந்தவாசி அருகே மர்மக் காய்ச்சல் : 20-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வந்தவாசி அருகே மர்மக் காய்ச்சல் : 20-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Added : ஆக 14, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வந்தவாசி: வந்தவாசி அருகே, மர்மக் காய்ச்சலால், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இரும்பேடு கிராமத்தில், சில நாட்களாக, அப்பகுதி மக்கள், மர்மக் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். வழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வந்தவாசி அரசு மருத்துவமனையில், 20-க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில், இரண்டு பெண்கள், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தலைமையில், சுகாதார துறையினர், இரும்பேடு கிராமத்தில் முகாமிட்டு, கிராம மக்களை பரிசோதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது:இரும்பேடு கிராமத்தில், டெங்கு அறிகுறி எதுவும் இல்லை. இது வைரஸ் காய்ச்சல் தான். கிராமத்தில் உள்ள குளத்து நீரை, பெரும்பாலானோர் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீரை சோதனை செய்ததில், குடிக்க உகந்தது அல்ல என தெரிந்தது. 'குளத்து நீரை குடிக்க வேண்டாம்' என, அறிவுறுத்தியுள்ளோம்.மேலும், நீர்நிலைகளில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளித்தல், கிராமப்
பகுதியில் கொசு ஒழிப்பு புகை அடித்தல், வீடுகளில் உள்ள தேவையற்ற டயர்கள், தேங்காய்
ஓடுகள் உள்ளிட்டவற்றை அகற்றுதல், குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில், குளோரின் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை