பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பான நாட்டுக்கு போங்க! அன்சாரிக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுரை

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (201)
Advertisement
பாதுகாப்பான நாடு, Safe country,அன்சாரி,  Ansari, ஆர்.எஸ்.எஸ்., RSS,  அறிவுரை,  Advice, புதுடில்லி, New Delhi,முன்னாள் துணை ஜனாதிபதி,  Former Vice President, ஹமீது அன்சாரி,Hameed Ansari,ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்,RSS senior leader Indresh Kumar,   இந்தியா, India, முஸ்லிம்கள்,  Muslims, பா.ஜ. - ஆர்.எஸ்.எஸ்., BJP. - RSS,

புதுடில்லி: ''முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.


கருத்து:


நாட்டின் துணை ஜனாதிபதியாக, 10 ஆண்டு பதவி வகித்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஹமீது அன்சாரி, 'இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என, முஸ்லிம்கள் நினைக்கின்றனர்' என, கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பாதுகாப்பு:

ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார், நாக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதும் ஹமீது அன்சாரி போன்றவர்கள், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு மிக்க, ஒரு நாட்டின் பெயரை சொல்ல வேண்டும். அந்த நாட்டுக்கு, ஹமீது அன்சாரி போன்றவர்கள் சென்று வாழலாம்.


ஆதரவு இல்லை:

ஹமீது அன்சாரி கூறிய கருத்துக்கு, ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏராளமான முஸ்லிம்கள், அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, மதச் சார்பற்றவராக திகழ்ந்த, அன்சாரி, பதவி போனபின், தீவிர முஸ்லிமாகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X