'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது' | 'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பார்சல்,Parcel வரி,Tax, ஜி.எஸ்.டி,GST, புதுடில்லி, New Delhi,ஏசி ஓட்டல்கள், AC Hotels, பார்சல் உணவு, Parcel Food,சரக்கு மற்றும் சேவை வரி,Goods and Service Tax, மத்திய அரசு,Central Government, நட்சத்திர ஓட்டல்கள், Star Hotels,

புதுடில்லி: 'ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஜி.எஸ்.டி.,:

நாடு முழுவதும், ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிட, 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.

ஏ.சி., ஓட்டலில் பார்சல் வாங்கினாலும் தப்பமுடியாது


விளக்கம்:

'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதி உடைய, ஓட்டல்கள், மற்றும் மதுபான விடுதிகளுக்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. 'ஏசி' வசதி இல்லாத ஓட்டல்களுக்கு, 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.எனினும், 'சில ஏசி ஓட்டல்களில், ஒரு தளத்தில் ஏசி பயன்பாடு இல்லை' என கூறி, 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.


பார்சலுக்கும் ஜி.எஸ்.டி.,:

இது குறித்து நேரடி வரிகள் வாரியம் கூறியதாவது: ஏசி ஓட்டல்களில், ஒரு பகுதியில் மட்டும் ஏசி வசதி இல்லை என கூறி, 18 சதவீதத்திற்கு பதில், 12 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது. அங்கிருந்து, 'பார்சல்' உணவு வாங்கி சென்றாலும், அதற்கும், 18 சதவீத வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும். ஓட்டலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏசி வசதி இருந்தாலும், அங்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (66)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201717:18:55 IST Report Abuse
Endrum Indian எப்படியெல்லாம் எல்லாவற்றிலும் கோணங்கித்தனம் பண்ணலாம் என்று அலைந்து கொண்டிருக்கும் போல இருக்கின்றது இவர்கள் செய்கை.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஆக-201715:54:38 IST Report Abuse
g.s,rajan Indha Nadum nattu makkalum Nasamaap pogattum..
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
14-ஆக-201715:21:53 IST Report Abuse
Vijay D.Ratnam நம்மாளுங்க ஒரு காரியத்துக்கு லஞ்சம் கொடுக்க, கமிஷன் கொடுக்க கொஞ்சம் கூட தயங்க மாட்டாங்க. ஆனால் அரசாங்கத்துக்கு வரி கட்டுவது என்றால் அப்படியே பொங்கி எழுந்துடுவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
14-ஆக-201715:08:15 IST Report Abuse
Selvaraj Thiroomal வரி தீவிரவாதம் என்பது அரசின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. அருகில் இருக்கும் ஒரே ஓட்டலில், அதில் ஒரு ஏசி இருக்கிறது. ஒரு தயிர்சாதம் ஐம்பது ரூபாய், அதற்கு வரி ஒன்பது ரூபாய்.. அம்மா ஓட்டலில் அதே தயிர்சாதம் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. யாரையும் நொந்துக்கொள்ள நமக்கு தகுதியில்லை..பத்து ரூபாய் டீக்குள் இனி நம்மை கவனித்துக் கொள்ளவேண்டியதுதான். ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து இன்றுவரை நான்கு ரூபாய் ஒரு லிட்டர் டீசல் விலையை ஏற்றியுள்ளது. ஐம்பது டாலர் அளவிலே கச்சா எண்ணெய்விலை நிலவி வருகையில் எப்படியொரு ஏமாற்றுவேலை. கேவலமான மக்களை வஞ்சிக்கும் நிர்வாகம்..
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
14-ஆக-201714:17:29 IST Report Abuse
வெற்றி வேந்தன் GST யில் நிறைய குறைபாடுகள் உள்ளது, விரைவில் அவற்றை களைந்து மக்களை வெறுப்பின் விளிம்பிலிருந்து நம்பிக்கையை நோக்கி அழைத்து செல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
14-ஆக-201714:01:17 IST Report Abuse
G Mahalingam Except tamilnadu, all other states total taxes before GST is 15.5% vat + service tax for restaurant. Now 18%. Star hotels,. Before GST the rate was 35 % ,. Now 28%.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஆக-201713:58:31 IST Report Abuse
தேச நேசன் போடுங்க போடுங்க எல்லாத்துக்கும் GST வரி போடுங்க , சுருட்டுங்க சுருட்டுங்க ஊழல் அரசியல்வாதிகளே உங்க இஷ்டப்படி எங்க நாட்டின் வளத்தை சுருட்டுங்க, இப்பொது நல்ல சம்பாதிக்க வழிசெய்யும் ஒரே துறை அரசியல் தான் , ஊழல் செய்து ஆட்சி மாறினால் , ஆட்சிக்கு அட்ஜஸ்ட் பண்ணி போனால் IT தொல்லை இருக்காது
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
14-ஆக-201713:25:00 IST Report Abuse
Sukumaran Sankaran Nair The 17 SDGs and 169 targets are a part of Transforming our world: the 2030 Agenda for Sustainable Development,which was adopted by 193 Member States at at the historic UN General Assembly Summit in September 2015,and came into effect on January 1,2016. தக்கவைக்கும் சமத்துவம், நீதி,பாதுகாப்பு முதலிய துணிகரமான வறுமை ஒழிப்பதற்கான 17 மேம்பாட்டு தக்கவைப்பதறகான இலக்குகள் உள்ளடக்கிய வரலாற்று பூர்வமான இத்திட்டம் தத்தெடுக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. 193 உலக நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்.இந்நிகழச்சியில் கலந்து சிறப்பித்த ஐநா உச்சநிலை மாநாட்டில் ,Jan 2016ல் அமுல் படுத்த வாக்களித்துள்ளார்கள். இந்த அரசாங்கம் அதை செயல் படுத்த இயலாவிடில், மாற்று வழி, அமைதியான, புனிதமான தேர்தல் முறையை அணுகும் சாசனங்கள் தயாரன நிலையில் இருந்தாலும்கூட மக்களை அவர்களாகவே தேர்ந்தெடுத்து,நீதி , நிர்வாக ,சட்ட விதி கள் அதிகார செல்வாக்கு அமையப் பெற்ற 9 (ஒன்பது) பேர் எண்ணிக்கையிலான ஆன்மிக சபைகள் ஒவ்வொரு ஊரிலும் ,நிறுவப்பட்டு, புதுடில்லியில்அமைந்துள்ள தேசிய ஆன்மீக சபையினால் இணைக்கப்பட வேண்டும். இந்த சபைகள் Judicial,Legislative and administrative powers அதிகாரங்கள் பெற்ற மக்களுக்கான சமூக தன்மை மாற்ற அபிவிருத்தி திட்டங்களை தற்போது 200 உலக நாடுகளில் செயல்பட ஒவ்வொரு அண்டையர்பகுதிக்கும் சென்று ஆன்மிக லௌகீக போதனைகளில் பெரும் மனித வளத்தை ஏற்படுத்தும் நற்செயல் பணிகளில் தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள். ://img.dinamalar.com/data/event_photo/ELARGE_20170808053657288513.jpeg
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஆக-201712:50:18 IST Report Abuse
g.s,rajan சாதாரண மக்களிடம் வரிக்கு மேல் வரி போட்டு அட்டை போல ரத்தத்தை உறிஞ்சும் அரசாங்கம் அம்பானி அதானி ,விஜய் மல்லையா போன்ற மிகப் பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வட்டித் தள்ளுபடி என்று பல லட்சம் கோடிக்கணக்கில் அரசாங்கம் செய்யுது .இது நியாயமா ???
Rate this:
Share this comment
K.Palanivelu - Toronto,கனடா
14-ஆக-201716:28:00 IST Report Abuse
K.Palaniveluகடந்த வருடத்தில் தொழிலதிபர்களுக்கு ஒரு ரூபாய் கூட வரி தள்ளுபடி அளிக்கவில்லை என சமீபத்தில் நிதியமைச்சர் அருண்ஜெட்லீ கூறியிருக்கும் போது இப்படி ஆதாரமில்லாமல் பொத்தாம்பொதுவாக குற்றம் சாட்டுவது தவறு....
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-ஆக-201712:23:35 IST Report Abuse
Karuthukirukkan ஒரு உருப்படியான எதிர் கட்சி தலைவர் இருந்தால் போதும் .. இந்த ஆட்சி ஒடனே தூக்கி எறியப்படும் .. அதுக்கு தான் மக்கள் காத்துட்டு இருக்காங்க .. என்ன எதிர் கட்சி வரிசையிலும் ஒருவரும் தெரியல ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை