தினகரன் எங்கே: தேடும் போலீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினகரன் எங்கே: தேடும் போலீஸ்

Added : ஆக 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: மதுரை, மேலூரில் இன்று தினகரன் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என, உளவுத்துறை போலீசார் தேடி அலைந்தனர்.
அ.தி.மு.க., தினகரன் அணி சார்பில், சமீபத்தில், நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இதனால், 'அவருக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை' என, முதல்வர் பழனிசாமி அணி தீர்மானம் நிறைவேற்றியது.இந்நிலையில், தினகரன் அணி சார்பில், மதுரை மாவட்டம், மேலூரில், இன்று பொது கூட்டம் நடக்கிறது. நேற்று காலை வரை தஞ்சையில் இருந்த தினகரன், ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலருடன் காரில், மதுரை செல்வதாக கூறி, கிளம்பினார்.அதன்பின், அவர் எங்கு சென்றார் என, யாருக்கும் தெரியவில்லை. அவர் திருச்சி வந்து, அங்கிருந்து திருப்பட்டூர் பிரம்மா கோவிலுக்கு சென்று, பெங்களூரு சென்றதாக கூறுகின்றனர். மேலூர் கூட்டத்துக்கு வரும் வரை, யார் கண்ணிலும் படாமல் இருக்கும் வகையில், பெங்களூரு சென்று விட்டதாகவும், இன்று மேலூர் வருவார் எனவும், அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தினகரன் எங்கே இருக்கிறார் என்பதை அறிய, அவரது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு பேசியும், உளவுத் துறைக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. தினகரன், எங்கோ ரகசியமாக தங்கியுள்ளார் என்பதை மட்டும் உளவுத்துறை போலீசார் உறுதி செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201706:53:40 IST Report Abuse
அப்பாவி நம்ம உளவுத் துறைக்கு ஒரு ஓ போடலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை