பெங்களூருவில் 127 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த 'பேய்மழை'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெங்களூருவில் 127 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த 'பேய்மழை'

Added : ஆக 16, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெங்களூரு, Bangalore, கனமழை,Heavy rain, வானிலை மையம், Weather Center,கர்நாடகா பேரிடர் கண்காணிப்பு மையம் , Karnataka Disaster Monitoring Center, பிலிகஹல்லி, Pilligalli, வெள்ளம், Flood, ஏரி,Lake, குளங்கள், Pools,சாலைகள் ,Roads,  ஐடி நிறுவனங்கள், IT Companies,மழை,Rain

பெங்களூரு : பெங்களூரு நகரில் ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு 11 மணிக்கு துவங்கிய கனமழை ஆகஸ்ட் 15 காலை 4 மணி வரை தொடர்ந்தது. இதனால் 44.8 மி.மீ., ஆக இருந்த ஆகஸ்ட் மாத மழையளவு 128.7 மி. மீ., ஆக உயர்ந்தது. கடந்த, 1890 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ம் தேதி பெங்களூருவில் பெய்த 162.1 மி.மீ., தான் இதுவரை மிக அதிகபட்ச மழையளவாக பதிவாகி உள்ளது. தற்போது 127 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மிக கனமழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 14 ம் தேதி இரவு மட்டும் 184 மி.மீ., மழை பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்ச மழையளவு பிலிகஹல்லியில் பதிவாகி இருப்பதாகவும் கர்நாடகா பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஏரி, குளங்களும் நிரம்பி வழிவதால் சாலைகள் பலவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 40 க்கும் மேற்பட்ட மீட்புப் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மழையால் பல இடங்களில் ஏராளமான மரங்கள் வேருடன் பெயர்ந்துள்ளதால், மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் முக்கிய ஐடி நிறுவனங்கள் உள்ள தெற்கு பெங்களூரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

127 ஆண்டுக்குப்பிறகு பெங்களூருவில் பலத்த மழை

Advertisement
வாசகர் கருத்து (16)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Muthukumar - Chennai,இந்தியா
16-ஆக-201717:38:23 IST Report Abuse
Muthukumar ரொம்ப வருத்தம் இந்த பதிவுகளை பார்க்கும்போது , சென்னை வெள்ளத்தில் நம் கற்று கொண்ட பாடத்தையும் , அடுத்தடுத்து எடுத்த விரைவான நடவெடிக்கைகளையும் அவர்களுக்கும் தெரிவித்து உதவலாம் அதை விடுத்து இப்படி பழி தீர்ப்பது போல நம் எண்ணங்கள் இருப்பதை பார்க்கையில் தமிழினம் பின்னோக்கி செல்கிறதோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
16-ஆக-201717:29:57 IST Report Abuse
balakrishnan சமீபத்தில் குஜராத்தில் கனமழை பல வீடுகள் மூழ்கின, ஏராளமான உயிரிழப்பு, அதைப்போல அசாம், இப்போது பெங்களூரு, எல்லாம் தேசிய கட்சிகள் ஆளுகின்ற மாநிலம், இங்கே சென்னையில் மழை பெய்து ஏதாவது ஆகியிருந்தால் எல்லா யோக்கியனும் பொங்கியிருப்பானுக, இவங்க நினைப்புக்கு இயற்கை அளிக்கும் தண்டனை,
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
16-ஆக-201716:22:27 IST Report Abuse
எமன் பொறுத்தார் புவி ஆள்வார்னு சொல்லுவாங்க. தமிழ்நாட்டுக்கு சொட்டுத்தண்ணி குடுக்கமாட்டோம்னாங்க. ஆனா இப்போ குடுக்காம இருக்கமுடியாதுல்ல. தமிழன் எப்போவுமே நல்லவன்டா, எதிரியை கூட வாழ வெச்சு தான் பழக்கம். போங்க போங்க போயி தண்ணியை தொறந்துவிடுங்க. எதோ தமிழனால் உங்க உயிர் பொழைச்சா போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X