இந்த திருடன் ரொம்ப நல்லவரு...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்த திருடன் ரொம்ப நல்லவரு...

Added : ஆக 16, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரளா, Kerala, திருவனந்தபுரம், Thiruvananthapuram, திருடன், Thief,  போலீஸ், Police, ரத்தம், Blood,  மன்னிப்பு கடிதம்,  Forgiveness Letter, பேஸ்புக், Facebook, கண்காணிப்பு கேமரா பதிவு, Surveillance Camera  நஸீம், Naseem,  கலாம்பலம்,Kalampalam, போலீஸ் ஸ்டேஷன், Police Station,

திருவனந்தபுரம்: கேரளாவில், வீடு புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடியவன், அது குறித்த வீடியோ காட்சிகள் பேஸ்புக்கில் வெளியானதால், பொருட்களை மீண்டும் வீட்டு வாசலில் வைத்து விட்டு, ரத்தத்தால் எழுதிய மன்னிப்பு கடிதத்தையும் விட்டு சென்றுள்ளான்.


கண்காணிப்பு கேமரா பதிவு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள நஸீம் என்பவர் வீட்டிற்குள் சில நாட்களுக்கு முன் புகுந்த திருடன் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்து சென்றான். இது குறித்து கலாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் நஸீம் புகார் செய்தார். மேலும், திருட்டு தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். எஸ்.ஐ., அருண் என்பவர் அந்த வீடியோ காட்சிகளை பேஸ்புகில் வெளியிட்டார். அதற்கு ஏராளமானோர் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.


வாழ்க்கையை சீரழித்து விட வேண்டாம்

இந்த சூழ்நிலையில், தான் திருடிய பொருட்களை நஸீம் வீட்டு வாசலில் அந்த திருடன் விட்டு சென்றான். மேலும், ரத்தத்தால் எழுதிய மன்னிப்பு கடிதத்தையும் அங்கே வைத்துள்ளான். அதில், ' நான் ஒரு மாணவன். நான் ஒரு தவறு செய்து விட்டேன். தயவு செய்து என் வாழ்க்கையை சீரழித்து விட வேண்டாம். போலீசார் என்னை பிடித்தால், நிலுவையில் உள்ள அத்தனை வழக்குகளையும் என் மீது போட்டு விடுவார்கள். அந்த பதட்டமே என்னை கொன்று விடும். பேஸ்புக்கில் உள்ள பதிவுகளை நீக்கும்படி போலீசாரிடம் கூறி விடுங்கள்' என்று எழுதப்பட்டுள்ளது. திருடு போன பொருட்கள் மீண்டும் கிடைத்ததால் நஸீம் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த திருடன் போலீசாரிடம் சிக்கி விட்டானா என்பது இன்னும் தெரியவில்லை

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.f.edison - chennai,இந்தியா
16-ஆக-201716:47:51 IST Report Abuse
s.f.edison குட். நசீம் பாய் மன்னிச்சுடுங்க . ஒரு திருடனாக போய் இருக்க வேண்டியவன் திருந்தி விடுவான் நீங்க அவனை நிரந்தர திருடனாக மாற்றிவிடாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
16-ஆக-201716:41:46 IST Report Abuse
srisubram அதிகமான வருமான விகிதாச்சாரம், மற்றும் விலைவாசி ஏற்றம் . இவை இரண்டும் கலையப்பெற்றால் , திருட்டை ஒழிக்க முடியும் . மேலும் , திருடர்கள் , நல்லவரால் , கொள்ளைக்காரர்கள் நல்லவர்கள் , வல்லவர்கள் , ஏழைகளுக்காக திருடுகிறார் , என்றெல்லாம் திரைப்படம் எடுக்காமல் இருந்தால் , திருட்டை குறைக்க முடியும் ..
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
16-ஆக-201716:40:44 IST Report Abuse
anand தமிழ்நாட்டையே ஆட்டைய போட்ட கட்டுமரம் கடைசி காலத்தில் இப்படி திருந்துமா?
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
17-ஆக-201701:08:51 IST Report Abuse
LAXவிஞ்ஞானமுறையில் ஊழல் செய்யும் பரம்பரைத் திருடர்களுக்கு இது வாய்ப்பே இல்லை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X