உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று: ஹமித் அன்சாரி| Dinamalar

உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று: ஹமித் அன்சாரி

Updated : ஆக 16, 2017 | Added : ஆக 16, 2017 | கருத்துகள் (178)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உருது மொழி, Urdu language, முஸ்லிம் மக்கள், Muslim people,முன்னாள் துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, Former Vice President Amit Ansari, புதுடில்லி,New Delhi,  ஹமித் அன்சாரி,Hamid Ansari, மேற்கு வங்கம் ,West Bengal,  கனடா, Canada, அமெரிக்கா,USA, America, ஆஸ்திரேலியா , Australia,

புதுடில்லி: '' உருது மொழி முஸ்லிகள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று,'' என, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த உருது மொழிக்கான இணைய தள துவக்க விழாவில் ஹமித் அன்சாரி பேசியதாவது:


இந்தியாவின் மொழி உருது: அன்சாரி பேச்சு

பல நாடுகளில் பேசப்படுகிறது

உருது மொழி என்பது முஸ்லிம் மக்கள் மட்டும் பேசும் மொழி அல்ல. நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று. ஆனால், உருது மொழியை அரசியல் பிரச்னையாக்கி விட்டனர். முஸ்லிம் மக்களுக்கு மட்டுமானது உருது மொழி என்ற தோற்றத்தை உருவாக்கி விட்டனர்.
தென் மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உருது மொழி பேசும் மக்களை எளிதில் அடையாளம் காண முடியும். கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உருது மொழி பேசும் மக்கள் உள்ளனர்.
அன்றாட வாழ்க்கைக்கு உருது மொழி முக்கியமில்லை என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதற்காக அந்த மொழியை கற்க கூடாது என எந்த தடையும் இல்லை. இது தான் உருது மொழிக்கு உள்ள மிகப்பெரிய தடை. எனினும், மற்ற மொழிகளை விட உருது மொழியில் தெளிவாக கூறவும், விளக்கவும் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
17-ஆக-201711:06:00 IST Report Abuse
srisubram கணேஷ் தருண் அவர்களே : தங்கள் கருத்து கேவலமாக மிக மிக கேவலமாக உள்ளது. தயவு செய்து தமிழை இழிவு படுத்தாதீர்கள் . தமிழில் அனைத்து விதமான தேவைகளுக்கும் சொற்கள் , வாக்கியங்கள் உள்ளன . நாங்கள் ஒன்றும் , துளுவிலிருந்தோ , மலையாளத்திலிருந்தோ , கன்னடத்திலி இருந்தோ , சொற்களை எடுத்துக்கொள்ளவில்லை .. இன்று நீங்கள் உபயோகிக்கும் ஆங்கில சொல்லான Boss என்பதற்கு , எங்கள் தூய தமிழில் உச்சி என்று ஒரு பதம் உள்ளது . தமிழை பற்றி நன்கு உணர தெரிய வேண்டும் என்றால், முதலில் , தேவார , திருவாசக , திருப்புகழ் பாடல்களை படியுங்கள் , முடியவில்லை என்றால் , மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வழக்கை வரலாற்றை படியுங்கள் , குறைந்த பட்சம் , உ வே சா அவர்களின் என் சரித்திரம் படியுங்கள் . பிறகு தெரியும் தமிழின் அருமை ..
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-201703:03:32 IST Report Abuse
Mani . V பாஜக அரசு ஏற்கனவே சில நூறு வருடங்களுக்கு முன்பே தோன்றிய ஹிந்தியை வலுக் கட்டாயமாக திணித்து வருகிறது. இப்பொழுது ஹமித் அன்சாரியோ "உருது மொழி நாடு முழுவதற்கும் தேவையான ஒன்று" என்று மற்றொரு பூதத்தை அவிழ்த்து விட்டுள்ளார். ஏற்கனவே இஞ்சி தின்று, கள்ளைக் குடித்த குரங்காக செயல்படும் பாஜக அரசு இவரின் பேச்சுக்குப் பிறகு, "இஞ்சி தின்று, கள்ளைக் குடித்து, குளவி கொட்டிய குரங்காக" செயல்படாமல் இருந்தால் நல்லது.
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
18-ஆக-201705:47:55 IST Report Abuse
தாமரை பாரதம் முழுவதும் பொதுவான ஒரு மொழி வேண்டும் என்பதற்காகத்தான் ஹிந்தியை கற்கச் சொல்கின்றனர். இதை இதுவரை நம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளுமே கடைப்பிடித்து வந்ததுதான். என்னமோ BJP சர்க்கார் மட்டுமே செய்வதுபோலவும் சொல்லும் Mani.V அவர்களே உங்கள் முகத்தில் கண்ணாடியில் பாருங்கள் அதற்கு முன்னால் வாயில் மென்று கொண்டிருக்கும் இஞ்சியை வெளியே துப்பி விட்டுப் பார்க்கவும்...
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
17-ஆக-201700:24:09 IST Report Abuse
Aarkay ஐயோ பாவம் An idle mind is a workshop of devils என்று சும்மாவா சொன்னார்கள்? மாமி வீட்டிலே அவருக்கு ஏதாவது வேலை கொடுங்கள் பையை கொடுத்து, ரேஷனில் சர்க்கரை வாங்கி வர சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X