தமிழக உள்ளாட்சித் தேர்தல்: சுப்ரீம் கோர்ட் கருத்து Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக உள்ளாட்சித் தேர்தல்:
சுப்ரீம் கோர்ட் கருத்து

'வார்டுகள் சீரமைப்பு பணிகளுக்காக, உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய அவசிய மில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2001 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்தும் வகையில், 2016ல், தமிழக அரசு, சட்டத்தில் திருத்தம் செய்தது.' கடந்த, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை விபரங்கள், மாநில அரசுக்கு, 2013ல் கிடைத்துள்ளன.

அதனால், 2011 மக்கள் தொகையின் அடிப்படை யில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்' என, தி.மு.க., சார்பில்,சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த

வழக்கு, நீதிபதிகள், ஜே. சலமேஸ்வர், எஸ்.ஏ. அப்துல் நசீர் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, சொலிசிட்டார் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதிட்டதாவது:

கடந்த, 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டு களை சீரமைக்கும் பணிகளை துவக்குவதற்கு, இந் தாண்டு ஜூலையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. பணிகள் முடிய,ஆறு மாதங்கள் ஆகும். அதனடிப் படையில் வாக்காளர் பட்டியல் வெளியிட மேலும் காலம் தேவைப்படும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'வார்டு சீரமைப்புக் காக, உள்ளாட்சித் ர்தலை தள்ளி போட வேண்டிய

Advertisement

 தமிழக உள்ளாட்சி தேர்தல், Tamil Nadu Local Election, சுப்ரீம்கோர்ட், உச்ச நீதிமன்றம் , Supreme Court, தமிழக அரசு,  Tamilnadu Government, தி.மு.க., DMK, நீதிபதிகள், Judges, ஜே. சலமேஸ்வர், J. Salameshwar, எஸ்.ஏ. அப்துல் நசீர் , SA Abdul Nasir, சொலிசிட்டார் ஜெனரல் ரஞ்சித் குமார் ,Solicitor General Ranjith Kumar,  விசாரணை,Investigations,  சட்டத் திருத்தங்கள்,  Legal Amendments, அரசியலமைப்பு சட்டம், Constitutional Law,

அவசியமில்லை' என்றனர். இந்த வழக்கில், தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டங்கள், சட்டத் திருத்தங்கள், அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளதா என்பது குறித்து விசாரிக் கப்படும் என்று கூறியுள்ள அமர்வு, வழக்கின் விசாரணையை, செப்., 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஆக-201720:05:52 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தமிழகத்தில் தேர்தல் பற்றிய செய்திக்கு பாஜக ஆதரவாளர்கள் கருத்தை போடுவது தான் ரொம்ப காமெடியா இருக்கு.. என்ன கெடைக்கப் போகுது?

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
17-ஆக-201719:37:09 IST Report Abuse

venkateshபாரினிலே நல்ல நாடு நம் பாரத நாடு. பாட்டுலதான் இங்கே எதுவும் உருப்படியா நடக்குதா.ஒரு குப்பைத்தொட்டி தேர்தல் கூட நடத்த முடியாம .வெட்கக்கேடு

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஆக-201715:56:39 IST Report Abuse

Balajiஇவர்களுக்கு தேர்தல் நடத்தி அதில் பெருவாரியாக தோற்றுவிடும் என்ற பயம் தான் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு முதல் காரணம்......... அவர்களது குடுமிப்பிடி சண்டைகள் அனைத்தும் ஓய்ந்த பின்னர் மக்களுக்கு ஏதாவது சலுகைகளை வழங்கிய பிறகுதான் தேர்தல் நடத்த முற்படுவார்கள்......... அதுவரை தமிழகத்தில் எந்த தேர்தலும் நடைபெறாது...........

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
17-ஆக-201715:11:11 IST Report Abuse

Giridharan Sதேர்தலே வேண்டாம்பா அப்படின்னு நம்ம பெண் ஆசிரியர்கள் புலம்பறது காதிலே விழுந்தா சார். இதையே கூட ஒரு சாக்க வச்சு தேர்தலை தள்ளிப்போடுங்க

Rate this:
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
17-ஆக-201712:33:11 IST Report Abuse

Harinathan Krishnanandamகடந்த மாதம் முதல் நாள் முதல் நாட்டின் பொருள் மற்றும் சேவை வரிகள் ஒன்றிணைக்கப்பட்டு பல லட்சம் கோடிகள் இணைய தளம் மூலம் எந்தவித தடங்கலும் இன்றி வசூலிக்கப்படும்போது தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியல் தயாரிக்க 10 ஆண்டுகள் என்றால் அதற்க்கு அரசே தேவை இல்லை மாநில ஆளுநர் நிர்வாகத்தில் தேர்தல் நடத்தி உள்ளாட்சி நிர்வாகம் செய்யலாம்

Rate this:
Tamilan - California,யூ.எஸ்.ஏ
17-ஆக-201710:52:05 IST Report Abuse

Tamilanஇந்த விளையாட்டு பஜக ஆரம்பித்து வைத்தது. இப்போது தேர்தல் நடந்தால் பஜக விற்கு ஒரு பயனும் இல்லை. இந்த அடிமைகளும் அது தெரிந்தே ஆடுகிறானுகள்

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஆக-201715:31:25 IST Report Abuse

Cheran Perumalஅமெரிக்காவில் இருந்தும் பொய்யா? அல்லது அமெரிக்காவே பொய்யா? இப்படி ஒரு வழக்கு தொடர்ந்து அது நிலுவையில் இருக்கும்போது உங்க கூட்டணி கட்சி திமுக, தலை முதல் வால்வரை, உள்ளாட்சி தேர்தலை உடனே நடந்து என்று கூப்பாடு போடுவது ஏன்?...

Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-ஆக-201710:11:09 IST Report Abuse

Nagarajan Dஇறைவா தமிழகத்தை இந்த திராவிட திருடர்களிடமிருந்து காப்பாற்று. A1 என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த ஜெயலலிதா கூட்டம் மற்றும் விஞ்ஞான திருடன் என குற்றம் சாட்டப்பட்ட கட்டுமரம் உள்ள வரை தமிழகத்திற்கு விடிவு இல்லை

Rate this:
Krishnaswamy Karuppuswamy Gounder - Chennai,இந்தியா
17-ஆக-201710:03:00 IST Report Abuse

Krishnaswamy Karuppuswamy GounderKasimani loosu Mani. Sitting in Singapore Who is he to tell to whom to vote

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-201718:24:02 IST Report Abuse

Kasimani Baskaranஜாதிப்பெயரை சேர்த்து போட்டு இருக்கும் நீ தான் பிரதான லூசு... ஜாதிய அடிமைகள் ஒழிக ஒழிகவே......

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஆக-201708:45:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇவர்கள் சண்டை ஓய்ந்த பிறகு வைத்து கொள்ளலாம் என்று வெளிப்படையாக சொல்ல முடியவில்லை..

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
17-ஆக-201708:04:41 IST Report Abuse

தங்கை ராஜாஉள்ளாட்சி தேர்தலை அடுத்த சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்திக்கங்கப்பான்னு உத்தரவு போடுங்கப்பா. இந்த கோர்ட்டுகளால எதையும் கெடுத்து விடத்தான் முடியும் நல்லது செய்ய முடியாது.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-ஆக-201715:32:38 IST Report Abuse

Cheran Perumalலவ் ஜிஹாத் விஷயம்தானே உங்களை தூங்கவிடாமல் செய்யுது?...

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement