தன் பக்கம் சேராத அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு தினகரன் மிரட்டல் Dinamalar
பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., ADMK, அமைச்சர்கள்,ministers, தினகரன், Dinakaran, மிரட்டல், threat, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சர்ச்சை, controversy,சசிகலா ,Sasikala, மதுரை மேலூர் , Madurai Melur,பொதுக்கூட்டம்,public meeting, ஓ.எஸ்.மணியன்,OS Maniyan, ராதாகிருஷ்ணன்,Radhakrishnan, ராஜு, Raju,விஜயபாஸ்கர் , Vijayapaskar, திருடன், Thief,விசாரணை கமிஷன் , Investigation Commission, எம்.எல்.ஏ.,MLA,அமைச்சர் சீனிவாசன், Minister Srinivasan, ராஜினாமா , resignation, அமைச்சர் ஜெயகுமார், Minister Jayakumar,

அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார்.

அ.தி.மு.க., ADMK, அமைச்சர்கள்,ministers, தினகரன், Dinakaran, மிரட்டல், threat, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சர்ச்சை, controversy,சசிகலா ,Sasikala, மதுரை மேலூர் , Madurai Melur,பொதுக்கூட்டம்,public meeting, ஓ.எஸ்.மணியன்,OS Maniyan, ராதாகிருஷ்ணன்,Radhakrishnan, ராஜு, Raju,விஜயபாஸ்கர் , Vijayapaskar, திருடன், Thief,விசாரணை கமிஷன் , Investigation Commission, எம்.எல்.ஏ.,MLA,அமைச்சர் சீனிவாசன், Minister Srinivasan, ராஜினாமா , resignation, அமைச்சர் ஜெயகுமார், Minister Jayakumar,

அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர் கூட, தினகரன் பக்கம் சேரவில்லை.

முதல் பொதுக்கூட்டம்


தன் ஆதரவு பலத்தை காட்ட, தினகரன், மதுரை மேலுாரில், முதல் பொதுக்கூட்டத்தை நடத்தி னார். அந்த கூட்டத்திற்கு, ஒரு அமைச்சர் கூட

போகவில்லை. ஆரம்பத்தில், சசிகலாவையும், தினகரனையும் வெளிப்படையாக ஆதரித்த அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன், ராதாகிருஷ் ணன், ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர் களிலும், ஒருவர் கூட, மதுரை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

இதனால், கடும் கோபம் அடைந்துள்ள தினக ரன், அமைச்சர்களுக்கு எதிராக, பகிரங்க மிரட் டல் விடத் துவங்கி உள்ளார். ஜெ., வகுத்த பாதையில், அமைச்சர்கள் நடக்கவில்லை என்றால், கடும் நடவடிக்கை எடுக்கப் போவதா கவும் அச்சுறுத்தி உள்ளார்.

நெருக்கடி


அதோடில்லாமல், சசிகலா காலில் விழுந்து, பதவி பெற்றஅமைச்சர்களின் படங்களை வெளி யிட்டு, அவர்களை வழிக்கு கொண்டு வரவும், தினகரன் திட்டம் தீட்டிஉள்ளார். இது போன்ற அச்சுறுத்தல்கள் வாயிலாக, அமைச்சர்களை ஆதரவாளர்களாக்கி, பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், அவர் முடிவு செய்துள் ளார்.இது தொடர்பாக, சென்னையில், நேற்று தினகரன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க.,வுக்கும், இந்த அரசுக்கும் தொடர்பு கிடையாது. சிலர், அ.தி.மு.க., தலைமை அலு
வலக அறையில் அமர்ந்து, தீர்மானம் நிறை வேற்றி, அது தான் உண்மை எனக் கூறி வரு கின்றனர். கட்சியை கொல்லைப்புறமாக கைப் பற்ற, சில அமைச்சர்களும், நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள், இது போன்ற தவறான செயலைகைவிட்டு, சரியான

Advertisement

பாதையில் செல்ல வேண்டும்;இல்லையெ னில் திருத்தப்படுவர். ஜெ., வகுத்து தந்த பாதையில் செல்லாவிட்டால், அவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.

தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க., தொண்டர் களுக்கும், யார் திருடன் என்பது, நன்றாக தெரியும். அதற்கு, விசாரணை கமிஷன் பதில் கூறும். சில, எம்.எல்.ஏ.,க்களிடம் பணம் கொடுத்து,'தினகரனுடன் சென்றால், தொகுதி தேவை களை செய்து தர மாட்டோம்' என மிரட்டி வைத்துள்ளனர்.

காலில் விழுந்தார்


'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என, அமைச்சர் சீனிவாசன் உட்பட அனைவருக்கும், என் பதிலாக தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் சீனிவாசன், 10 ஆண்டுகளாக எங்கிருந்தார் என, தேட வேண்டி இருந்தது. அவர் வேண்டு மானால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்யட்டும்; நான் வேறு ஆள் போட்டுக் கொள்கிறேன்.

அவருக்கு வயதாகி விட்டது. 'இருக்கும் வரை பார்த்துக் கொள்ளலாம்' என, நினைக்கிறார். அவர், சசிகலா காலில் விழுந்து கும்பிட்டதை எல்லாம் வெளியிட்டால், அசிங்கமாகி விடும். பொருளாளர் பதவி வழங்கியதும், சசிகலா காலில் விழுந்தார்.

பயம் வந்துவிட்டது


என் காலில் விழ முயன்றபோது, நான் தடுத் தேன். அமைச்சர்கள் அனைவரும், ஏப்., 10 வரை, எனக்காக ஓட்டு கேட்டனர். அடுத்த ஒரு வாரத்தில், அவர்களுக்கு பயம் வந்து விட்டது.
அமைச்சர் ஜெயகுமார், எனக்காக ஓட்டு கேட்டார். நாங்கள் கொடுத்த, நிதி அமைச்சர் பதவி, மீனவர் அணி செயலர் பதவியில் தான் இருக்கிறார்.

தற்போது, எப்படியாவது பன்னீர் காலை பிடித்து சேர்த்து, ஒன்று சேரலாம் என, நினைக்கின்ற னர்; ஆட்சியை காப்பாற்றலாம் என திட்டம் போடுகின்றனர்கட்சிஇருந்தால்தான்,ஆட்சியை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (69)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
17-ஆக-201720:20:21 IST Report Abuse

Tamilachiஇங்க கருத்து பதிவிடுபவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும்... பழனிசாமி கூட நெடுங்கால கட்சி உறுப்பினன், MLA மற்றும் அமைச்சராக இருந்து அம்மாவின் ஆட்சியில் இடம் பெற்றவர். ஆனால் தினகரன் யார், கட்சி அடிப்படை உறுப்பினர் அட்டை கூட சசிகலாவின் சப்போர்டில் வாங்கியதாகத்தான் இருக்கும். இவன் பண்ணிய அயோக்கிய தனத்தால் அதுவும்கூட அம்மாவால் பிடுங்கப்பட்டு ஓடி ஒளிந்துகொண்டு இருந்தவன். இன்று சசிகலா மற்றவர்களை நம்பாமல் இவனை நம்பி அவசரம் அவசரமாக தன்னுடைய பதவியே செல்லுமா என தெரியாமல் துணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி உடனே மன்னிப்பு கடிதம் கொடுத்து உடனே அடிப்படை உறுப்பினராக சேர்த்து விட்டு பின்னர் கலி தின்ன போய் விட்டார். கட்சியினர் மட்டும் அல்ல இவனை பொது ஜனம் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியில் அடிப்படை சட்ட திட்டங்களை தூக்கி எறிந்துவிட்டு இவர்கள் நடத்தும் நாடகத்தை நினைத்தாலே மனம் பற்றி எரிகிறது... எல்லா பக்கங்களில் இருந்து வரும் இதனை மிரட்டல்கள் பிரச்சனைகளையும் சமாளித்து அனைத்து அமைச்சர்களையும் மெல்ல மெல்ல தன் பக்கம் கொண்டு வந்து பக்காவாக காய் நகர்த்தும் பழனிசாமி நிச்சயம் ஆட்சியை தக்கவைப்பார். ஆனால் அது நேர்மையான ஆட்சியாக இருக்குமா என்று சொல்ல முடியாது....

Rate this:
17-ஆக-201719:32:10 IST Report Abuse

RajendranRajendranதினகரன்சசிஇவர்கள்கருத்துக்களைசெய்தித்தாளில்போட்டுவெறுப்பேற்றாதிர்கள்அவர்கள்மக்கள்பிரதிநிதிகளா?

Rate this:
17-ஆக-201719:32:10 IST Report Abuse

RajendranRajendranதினகரன்சசிஇவர்கள்கருத்துக்களைசெய்தித்தாளில்போட்டுவெறுப்பேற்றாதிர்கள்அவர்கள்மக்கள்பிரதிநிதிகளா?

Rate this:
17-ஆக-201719:32:10 IST Report Abuse

RajendranRajendranதினகரன்சசிஇவர்கள்கருத்துக்களைசெய்தித்தாளில்போட்டுவெறுப்பேற்றாதிர்கள்அவர்கள்மக்கள்பிரதிநிதிகளா?

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
17-ஆக-201717:10:38 IST Report Abuse

ezhumalaiyaanஇதே விதத்தில் தான் தனித்து விடப்பட்ட ஜெயலலிதாவை அச்சுறுத்தி காரியங்களை சாதித்து இருக்கும் இந்த நயவஞ்சகக்கூட்டம்.கூட்டியே பதினாறு ஆதி பாய்கிறதே (சின்ன)தாய் எவ்வளவு அடி பாய்ந்திருக்கும்.

Rate this:
bala - VIRUDHUNAGAR,இந்தியா
17-ஆக-201717:08:01 IST Report Abuse

balaஉங்க மிரட்டலுக்கெல்லாம் சின்ன குழந்தைகூட பயப்படாது ?

Rate this:
san joseph - chennai,இந்தியா
17-ஆக-201717:00:30 IST Report Abuse

san josephபில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மட்டம் மட்டும் வீக்.....

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
17-ஆக-201715:51:34 IST Report Abuse

Sundaramஎன்னமா பொங்குராருயா மனுஷன் ..ஆனா நீ எல்லாம் தமிழகத்துக்கு தேவ இல்லை

Rate this:
Mahesh - Chennai,இந்தியா
17-ஆக-201714:36:14 IST Report Abuse

MaheshSo dinakaran accepts that falling in sasikala feet is dirty picture....that's y he threatens to release that photo of calling at her feet....this is what is called suicide talk

Rate this:
Revathi Archana - madurai,இந்தியா
17-ஆக-201714:30:30 IST Report Abuse

Revathi Archanaஎன்ன ஒரு நடையப்பா உனது மானங்கெட்ட வேற நடை .சிவாஜி செத்தார் போ .

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்