செல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு அச்சம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

செல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய அரசு அச்சம்

Added : ஆக 17, 2017 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
செல்போன் ,Mobile phone,பாதுகாப்பு,Security, மத்திய அரசு,Central Government, அச்சம்,Fear, புதுடில்லி, New Delhi, சீனா,China, இந்தியா, India, இறக்குமதி, Import,ஸ்மார்ட் போன், Smart Phone, டோக்லாம் , Tokelam,தகவல் தொழிற்நுட்ப பொருட்கள், Information Technology Products,

புதுடில்லி: சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் செல்போன்களில் பயன்பாட்டாளர்களின் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அச்சத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்டர் போன்களில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் குறித்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா சீனாவிடையே நடக்கும் டோக்லாம் விவகாரத்தால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தகவல் தொழிற்நுட்பட பொருட்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து செல்போன் நிறுவனங்களுக்கும், செல்போன்களில் வாடிக்கையாளர்களின் தகவல்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்குமாறு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
mahesh - karaikudi,இந்தியா
17-ஆக-201711:07:11 IST Report Abuse
mahesh ஸ்மார்ட்போன் ஒரு பாதுகாப்பற்ற உபகரணம். அதன் செயல்பாடுகளை கவனித்தால் விளங்கும். லொகேஷன், கேமரா, இன்டர்நெட் இவை எல்லாம் தாமாக சமயத்தில் செயல்படும். ஒரு ஆப் இன்ஸ்டால் பண்ணா அந்த ஆப் எல்ல தகவலையும் எடுக்கும். ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் நினைத்தால் அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஸ்மார்ட்போனை இயக்க தொழில் நுட்பத்தில் வழிவகை உள்ளது. நமது பாதுகாப்பு நமது உடலுக்கு மட்டும் தான் யோசிக்க வேண்டும். நமது தகவல்களுக்கு (ரகசிய தகவல் என்று ஓன்று டிஜிட்டல் உலகத்தில் இல்லை ) இல்லை.
Rate this:
Share this comment
Cancel
17-ஆக-201708:40:18 IST Report Abuse
அப்பாவி அதெல்லாம் ஒண்ணுமில்லே...எல்லா போன்களும் கூகுளின் ஆன்றாய்ட் செயலியை வைத்தே இயக்கப்படுகின்றன. ஆனால் போனுடன் வரும் ஆப்களில் தில்லுமுல்லு செய்ய முடியும். சீனாக்காரன் பண்ணினா நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? கொஞ்சநாள் பொறுத்துப் பாருங்க...இப்பவே ரிலையன்ஸ் ஜியோ ஃப்ரீ சிம் கார்டுன்னுட்டு நம்ம தகவல்கள் எல்லாத்தையும் சுருட்டிட்டான்... நமது மக்கள் வெறும் பயனாளர்கள்... இன்னிக்கு ஃப்ரீயா கொடுத்தா பினாயில் கூட குடிப்பார்கள். ஆனால் நாலெழுத்து படிச்சு அறிவை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
17-ஆக-201708:30:35 IST Report Abuse
sam இந்த லட்சணத்தில் மக்களை டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாற சொல்கிறீர்கள். முதலில் டிஜிட்டல் செக்யூரிட்டி யை சரி செய்து விட்டு இவர்கள் சொல்லட்டும்
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
17-ஆக-201710:17:28 IST Report Abuse
Abdul Rahmanநீ இதுமாதிரி சீன குப்பை போனை வாங்குவே, அதில எங்கே டிஜிட்டல் செக்யூரிட்டி கொண்டுவருவது?...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஆக-201707:49:36 IST Report Abuse
Srinivasan Kannaiya நமது மக்களுக்கு நாட்டு பற்று குறைவாக உள்ளதால் மற்ற நாட்டு பொருள்கள் விலை போகின்றது...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஆக-201707:44:24 IST Report Abuse
K.Sugavanam அப்படியே Hauwei நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை பயன்படுத்த தொலைத்தொடர்பு மற்றும் மின்னியல் துறைகளுக்கு உத்தரவு போடுங்க. இந்தியாவில் உள்ள அனைத்து சீனாவில் செய்யப்பட பொருட்களையும் அழிக்க உத்தரவிடுங்க..இனி சீனாவிலிருந்து இங்கே திருட்டுத்தனமாக பொருட்களை கொண்டுவந்ந்து விற்போருக்கு ராஜதுரோக வழக்கின் கீழ் மரண தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் கொண்டுவாருங்க..அணைத்து POS மிஷின்கள்,சீனர் அதிக பங்குகளை வைத்துள்ள PayTM ஐ தடை செய்யுங்க..நாடு முன்னேறும்..
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
17-ஆக-201710:18:58 IST Report Abuse
Abdul Rahmanதம்பி, Hauwei யம் சீன கம்பனிதான். அதை ஏன் சப்போர்ட் செறிங்க?...
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
17-ஆக-201710:19:33 IST Report Abuse
Abdul Rahmanசீன பொருட்களை தடை செய்யலாம்....
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar Yadav - Ramnad(dt),Thathankudi.,இந்தியா
17-ஆக-201703:48:53 IST Report Abuse
Senthilkumar Yadav Yes,must stop the China products tks
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை