மோடி மீது ராகுல் பாய்ச்சல்; எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
மோடி மீது ராகுல் பாய்ச்சல்
எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பு

பா.ஜ.,வுக்கு எதிராக, பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், நேற்று கூட்டினார். இதில், பிரதமர் மோடியை, கடுமையாக அவர் விமர்சித்தார்.

 மோடி,மீது,ராகுல்,பாய்ச்சல்,எதிர்க்கட்சிகளுடன்,கைகோர்ப்பு

'நாட்டின் பன்முக கலாசாரத்தை காப்பாற்று வோம்' என்ற தலைப்பில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. ஒரு கோடி வேலைஇதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், காங்., துணை தலைவர் ராகுல் பேசியதாவது:கடந்த லோக்சபா தேர்தலின் போது, பல்வேறு வாக்குறுதிகளை,

மோடி அள்ளி வீசினார். வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணத்தை மீட்டு வருவ தாகவும், ஆண்டுக்கு, ஒரு கோடி வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்; ஆனால், இதில் எந்த வாக்குறுதி யும் நிறைவேற்றவில்லை.

துாய்மையான இந்தியா


மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' திட்டம், படு தோல்வியடைந்துள்ளது. நாட்டில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள், சீனா தயாரிப்பாகத் தான் உள்ளன.துாய்மையான இந்தியாவை உரு வாக்க வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்.

ஆனால், உண்மையான இந்தியாவைத் தான் நாங்களும், மக்களும் விரும்புகிறோம். ஏனெனில், எங்கு சென்றாலும், சரளமாக பொய் பேசுவது, மோடியின் வழக்கமாக உள்ளது. நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்ற, ஆர்.எஸ்.எஸ்., துடிக்கிறது.

'இந்த நாடு என்னுடையது' என, ஒருவர் கூறுகிறார்; 'இந்த நாட்டைச் சேர்ந்தவன் நான்' என, நாம் கூறுகி றோம்; இதுதான், நமக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப் புக்கும் உள்ள வித்தி யாசம்.இவ்வாறு அவர் பேசி னார்.தற்போது,மத்தியில்,பா.ஜ., தலைமையிலான,

Advertisement

தே.ஜ., கூட்டணி பலமாக உள்ளது. பெரும்பா லான மாநிலங்களிலும், பா.ஜ.,வே ஆளும் கட்சியாக உள்ளது.

பலமான கூட்டணி


இதனால், பா.ஜ.,வுக்கு எதிராக பலமான கூட் டணியை உருவாக்கும் முயற்சியில், ராகுல் இறங்கியுள்ளார். இதன் முதல் முயற்சியாகவே, எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட் டத்தை, நேற்று அவர் கூட்டியதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
18-ஆக-201719:05:23 IST Report Abuse

sridharராகுல் செல்லும் இடமெல்லாம் khancross தோற்கிறது. அவர் பிஜேபிக்கு தான் சேவை செய்கிறார். அவரை அப்படியே பணி செய்ய விடுங்கள்.

Rate this:
Rameeparithi - Bangalore,இந்தியா
18-ஆக-201717:43:06 IST Report Abuse

Rameeparithiசிங்க கூட்டணியை எதிர்க்க பலமான கூட்டணி... அதுவும் உளறுவாயன் கையால்... உருப்பட்டுரும்

Rate this:
V.Ravichandran - chennai .,இந்தியா
18-ஆக-201716:57:36 IST Report Abuse

V.Ravichandranஏன் கண்ணு கத்தி பாக்குறே நீ இருக்கற மட்டும் பிஜேபி க்கு கவலை இல்லை , நீ எப்படியும் காங்கிரஸ் ஆபீஸ்க்கு பூட்டு போட்டுட்டு தான் இத்தாலிக்கு போறது என்று முடிவு பண்ணிட்டே , இல்லை உங்க அம்மாவோட ஜெயிலுக்கு போறியோ .

Rate this:
srisubram - Chrompet,இந்தியா
18-ஆக-201716:17:29 IST Report Abuse

srisubramஜமாத்தி குரூப் பாகிஸ்தான் மக்கள் மத்திலேயே தான் இருக்காங்க பாய், அப்புறம் அங்க ஏழை சிறுமிகளை செங்கல் சூளைகளில் , கொத்தடிமைகளாக வைத்து சொல்லொணா துயரங்களை அனுபவிக்கிறார்கள் , மேலும் இங்குள்ள மக்களோ , RSS இயக்கமோ , யாரும் இஸ்லாமியரை வெறுக்கவில்லை . RSS தலைவர் சுதர்ஷன் ஒரு முஸ்லீம் சிறுவன் வீட்டிற்கு வழிதெரியாமல் சென்று பின்னர் அவனுடன் அவன் வீட்டிற்கு வந்தார் . இங்கு நான் ஒரு முஸ்லீம் வயோதிக தாயாருக்கு தினமும் பல்வேறு உதவி செய்கிறேன் . , RSS இல் ஒரு முஸ்லீம் பிரிவும் உள்ளது , அதன் பெயர் ராஷ்ட்ரிய முஸ்லீம் மஞ்ச் . இங்கு எல்லோரும் சமம் என்பது தான் கொள்கை ..

Rate this:
Hariharan Iyer - Nagpur,இந்தியா
18-ஆக-201714:33:09 IST Report Abuse

Hariharan Iyerமோடிஜி மற்றும் பிஜேபியின் பரம வைரியான இந்தியா டுடே எடுத்த நேற்றைய கருது கணிப்பில் இப்போது தேர்தல் வந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களையும் அதில் பிஜேபி மட்டும் 298 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்று நியூஸ் வந்து இருக்கிறது. ஆகையால் அரபு அடிமைகள் மற்றும் இத்தாலியன் அடிவருடிகள் 2024 தேர்தலை பற்றி கனவு கண்டாலும் நடக்காது. ஏன் என்றால் 2024 தேர்தலில் பிஜேபி மட்டும் 375 - 400 இடங்களில் வெற்றி பெறும். agaiyal 2029 தேர்தல் பற்றி பேசுங்கள்.

Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
18-ஆக-201714:27:03 IST Report Abuse

Babu Desikan"அட கிறுக்குப் பயலுகளா, bomb வச்சிருக்குன்னா அங்கேயே நின்னுட்டு ஏன்டா கத்திட்டு இருக்கீங்க.. இந்த பக்கம் வாங்க டா" என்று வடிவேல் காமெடியில் கத்துவதை போல் இருக்கிறது..

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
18-ஆக-201714:05:49 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanமோடியின் குஜராத்தில் 220 பேர் பன்றி காச்சலுக்கு பலியாகி உள்ளனர். 300 பேர் சீரியஸ் என செய்தி. தினமலரில் அதை பற்றிய செய்தியே இல்லையே.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-ஆக-201713:26:15 IST Report Abuse

Pasupathi Subbianபலமான கூட்டணி இல்லை , பயந்தவர்களின் கூட்டணி.

Rate this:
venkat - chennai,இந்தியா
18-ஆக-201718:16:20 IST Report Abuse

venkatசூப்பர்...

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
18-ஆக-201718:17:51 IST Report Abuse

kc.ravindranஇவர்களின் கூட்டணி அமாவாசையை போல. சில மணி நேர கூத்து....

Rate this:
S K NEELAKANTAN - chennai 24,இந்தியா
18-ஆக-201712:46:08 IST Report Abuse

S K NEELAKANTANஇவனுக்கெல்லாம் ஊழல் பற்றி பேசவோ, தூய்மை பற்றி பேசவோ என்ன அருகதை இருக்கிறது. ,

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஆக-201711:53:48 IST Report Abuse

Nallavan Nallavanஇவர் தொடர்ந்து இப்படிக் கூவினால் """" பாஜக நல்ல கட்சி .... மோதிதான் சரியில்லை போல """" என்று நம்பிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இவருக்கு .....

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement