கோரிக்கை குறித்த அறிவிப்பு இல்லாததைக் கண்டித்து வி.ஏ.ஓ. க்கள் வெளிநடப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வி.ஏ.ஓ.,க்கள் வெளிநடப்பு:

முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், கிராம உதவியாளர்கள் கோரிக்கை தொடர்பாக, முதல்வர் எந்த அறிவிப்பையும் வெளியிடாத தைக் கண்டித்து, கிராம உதவியாளர்கள், முதல்வருக்கு எதிராக கோஷமிட்டனர்.

வி.ஏ.ஓ,VAO, வெளிநடப்பு,Walkout, பழனி திண்ணை,Palani, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy,  அமைச்சர்கள்,Ministers, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, MGR Century Festival, MGR centenary celebration ,கிராம உதவியாளர்கள் , Village Assistants,முதல்வர்,Cheif minister, கிராம நிர்வாக அலுவலர்கள், Rural Administrators,  சென்னை, Chennai, கலைவாணர் அரங்கம்,Kalaivanar Stadium, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் , Revenue Minister Udaya Kumar, தமிழகம்,  Tamilnadu

கிராம நிர்வாகஅலுவலர்கள், கிராமஉதவியாளர் கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர் சங்கங்களின் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

விழாவில், வருவாய் துறை அமைச்சர் உதய குமார் பேசுகையில், ''உங்களின் கோரிக்கை தொடர்பாக, முதல்வர் முக்கிய அறிவிப்புகளை, வெளியிட உள்ளார்,'' என்றார். இதனால், விழாவிற்கு வந்த அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

முதல்வர் பழனிசாமி பேசும்போது, கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவைத் துறை அலுவலர்கள் கோரிக்கைகள் தொடர்பாக, சில அறிவிப்புகளை வெளியிட்டார். கிராம உதவியாளர்கள் கோரிக்கை தொடர்பாக, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இதனால், அரங்கில் நிரம்பியிருந்த, கிராம உதவியாளர் கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனைவரும் எழுந்து நின்று, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பத் துவங்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சிலர் மேடை முன்

வந்து, கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்ட னர். அதைத் தொடர்ந்து, முதல்வர் மற்றும் அமைச் சர்கள், வேகமாக அங்கிருந்து வெளி யேறினர். கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகளை, அமைச்சர் உதய குமார் சமாதானம் செய்தார்.

ஆனால், முதல்வர் அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து, கிராம உதவியாளர்கள் அனைவரும், அரங்கிலிருந்து வெளியேறினர்.அரங்கிற்கு வெளியே, பந்தலில் அமர்ந்து இருந்தவர்களும் வெளியேறினர். முதல் வர் படத்துடன் கூடிய, 'பேட்ஜ்'களை கிழித்து எறிந்த னர். சிறப்பாக நடந்த விழா, இறுதியில் ரகளையில் முடிந்தது.

இது குறித்து, கிராமஉதவியாளர்கள் கூறியதாவது:
நாங்கள் பகுதி நேர ஊழியர்கள். ஆனால், 24 மணி நேரமும் பணி செய்து வருகிறோம். எங்கு பிரச்னை நடந்தாலும், அங்கு சென்று, தகவல் சேகரித்து, உயர் அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கிறோம். எனவே, எங்களை முழு நேர ஊழியர்களாக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அனைவ ரையும் உடனடியாக, முழு நேரப் பணியாளர்களாக மாற்ற முடியாவிட்டால்,20ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களையாவது, முழுநேர ஊழியராக்குமாறு வலியுறுத்தினோம்.

பொங்கலுக்கு வழங்கப்படும், ஊக்கத்தொகை, 1,000 ரூபாயை, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.இது தொடர்பான அறிவிப்பு களை, விழாவில்முதல்வர் அறிவிப்பதாக தெரிவித் திருந்தனர். ஆனால், எந்த அறிவிப்பையும் வெளி யிடாமல் ஏமாற்றி விட்டனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சமைத்த உணவு வீண்!


விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து,கிராம உதவி யாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற னர். கலைவாணர் அரங்கம் நிரம்பி, அதன் வளாகத் தில் போடப்பட்டிருந்த பந்தல்களிலும்,அமர வைக்க பட்டிருந்தனர்.அனைவருக்கும் உணவுதயார் செய் யப்பட்டிருந்தது.ஆனால்,கிராம உதவியாளர்கள்

Advertisement

கோபத்தில்,உணவு சாப்பிட மறுத்து வௌியேறி விட்டனர். இதனால், சமைக்கப்பட்ட உணவு வீணாகியது.

பராமரிப்பு செலவு உயர்த்தி வழங்க உத்தரவு
சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த விழாவில், எம்.ஜி.ஆர்., படத்தை திறந்து வைத்து முதல்வர்பழனிசாமி, பேசியதாவது: தமிழகத்தில்,12 ஆயிரத்து,616 கிராம நிர்வாகஅலுவலர்கள் உள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், சமூக பாதுகாப்பு திட் டங்கள், பயனாளிகளை சென்றடைய, பெரிதும் உதவி வருகின்றனர்.
செல்வாக்கோடு இருப்போரும், சான்றிதழ் பெற, கிராம நிர்வாக அலுவலரிடம் சென்றாக வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்களாக, கிராம நிர்வாக அலுவலர் கள் உள்ளனர்.அவர்களின் கோரிக் கைகள் தொடர்பாக, சிலஅறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

* கிராம கர்ணம், கிராம முன்சிப் தேர்வில், 1980 நவ., 14க்கு முன், தேர்ச்சி பெற்று, 2009ல் பணி நியமனம் செய்யப்பட்ட, 747 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடங்களை, தகுதி அடிப்படையில் வரைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்
* கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் பராமரிப்பு செலவாக, ஆண்டுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
* தாலுகா அலுவலகங்களில், இணைய வழி யில் பட்டா வழங்குவதற்காக சேர்க்கப்பட்ட, 254, 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' பணி, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் படும்
* கிராம நிர்வாக அலுவலர்கள், நிர்வாக சாத்திய கூறு மற்றும் வழிகாட்டு விதிகளின் படி, சொந்த உள்வட்டம் மற்றும் தாலுகாவில், பணி நியமனம் செய்ய, உத்தரவு பிறப்பிக்கப் படும்
* கிராம நிர்வாக அலுவலர்களின் பணித் திறனை மேம்படுத்த, '3ஜி, 4ஜி சிம் கார்டு'டன் கூடிய, இணையதள வசதி ஏற்படுத்தப்படும்; எழுதுபொருள் செலவினம் வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.-நமதுநிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padma Latha - bangalore,இந்தியா
18-ஆக-201714:34:14 IST Report Abuse

Padma Lathaமுதலமைச்சர் மற்ற அமைச்சர்கள் எல்லோரும் இருக்கும் கூட்டத்தில் இவ்வளவு முட்டாள் தனமாக நடந்து கொள்ளலாமா? கிராம மக்கள் இவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது அப்பொழுதுதான் புத்தி வரும். இவர்கள் ஏழை என்று நன்கு தெரிந்த மக்களிடமும் லஞ்சம் வாங்கி எந்த ஆட்சி இருந்தாலும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்கள். அதனால் அவர்களுக்கு ஏதாவது punishment கொடுக்கவேண்டும் (suspension or something like that ) . முதல்வர் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அந்த பதவிக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
18-ஆக-201712:04:23 IST Report Abuse

rajaகிராம நிர்வாக அலுவலர் என்ற பதவி மக்களிடம் கொள்ளை அடிப்பதை குறிக்கோளாக கொண்டது. இந்த கூட்டத்தை மக்கள் ஒரு நாள் இல்லை என்றால் மற்றொருநாள் விரட்டி அடிக்கும் நிலை வரும்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
18-ஆக-201709:34:03 IST Report Abuse

balakrishnanயாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை, அதிகாரம் இருக்கிறது, அதுவும் போய்விட்டால், இவர்களை ஒரு நாய் கூட சீந்தாது

Rate this:
samkey - tanjore,இந்தியா
18-ஆக-201708:22:31 IST Report Abuse

samkeyஇவனுக இம்சை தாங்க முடியல. பேருக்குத்தான் இவனுக உதவியாளர்கள். மற்றபடி நாட்டில் நடைபெறும் அணைத்து அயோக்கிய தனங்களுக்கும் இவனுக உடந்தை. வருவாய் துறையில் ஊழல் மலிந்துகிடப்பதற்கு அடிப்படையே இவர்கள் தாம். ஒரு காலத்தில் தாசில்தார் வருவாய் ஆய்வர் போன்ற அதிகாரிகளுக்கு மக்களிடம் பயம் கலந்த மரியாதை இருந்தது. அதை பாழாக்கியவர்கள் இவர்கள் தாம். இவனுகளும் நில அளவைத்துறை அதிகாரிகளும் கூட்டணி அமைத்து கொள்ளையடிக்கின்றனர். புதிதாக வேலைக்கு சேர்ந்த கிராம நிருவாக ஊழியர்களுக்கு போதுமான அனுபவ அறிவோ தகுதியோ கிடையாது பெரும்பாலோனோர் காசு கொடுத்து வேலை வாங்கியவர்கள் எனவே இவனுகதான் இப்போதைக்கு எல்லாம். இவனுகதான் உள்ளூர் கொள்ளையனுக்கு (மணல் கொள்ளையர்கள் மலை விழுங்கி மஹாதேவனுக்கள் மற்றும் கனிம கொள்ளையணுகள் நில அபகரிப்பு மோசடி பேர்வழிகளுக்கெல்லாம்) துணை நின்று ஆள்காட்டி கொடுக்கும் கருப்பு ஆடுகள்

Rate this:
sam - Doha,கத்தார்
18-ஆக-201708:20:46 IST Report Abuse

samஇந்த ஆட்கள் எல்லாம் வெற்று டப்பாக்கள். அவர்களுடைய தலையாய கடமை கொள்ளை அடிப்பது, அதற்காக யார் காலிலும் அவர்கள் மண்டியிட தயார்.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
18-ஆக-201707:30:32 IST Report Abuse

தங்கை ராஜாமக்களுக்குத்தான் ரோஷமில்லை.

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
18-ஆக-201712:40:33 IST Report Abuse

rajaஅருமை...

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
18-ஆக-201707:00:32 IST Report Abuse

சந்தோசு கோபுக்க்க்ஹ்ஹ்ஹ்ஹா ஹா ஹா...... எடுபுடியார் தொடர்ந்து அவருடைய நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்க்க தனியா ஒரு டெக்னிக் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கார்.. என்னன்னா அரசு உதவி பெறுவோர் பயனாளிகள் என்று மொத்தமா ஆயிரக்கணக்கான பேரை முன் கூட்டியே அறிவிச்சுட்டு மொத்த பேரையும் வளைச்சிக்கிட்டு வந்து கூட்டத்துல உட்கார வச்சுடுறது.. ஒவ்வொருத்தரா மேடைக்கு கூப்பிட்டு தன் கையாலேயே பொருளோ உதவிப்பணமோ கொடுக்குறது.. அதே டெக்னிக் படி தான் இந்த முறையும் கூட்டத்துக்காக கிராம பணியாளர்களை வரவழைச்சுட்டு அவங்களுக்கு அல்வா கொடுக்க பார்த்திருக்காரு, அது ரிவர்ஸ் ஆயி கூட்டம் கலைஞ்சி போயி பாவம் தனியா மேடையை குந்திகிட்டு இருக்குற நிலைமைக்கு விட்டுடுச்சு..

Rate this:
18-ஆக-201706:53:45 IST Report Abuse

அப்பாவிஇவ்வளவு அறிவிச்சும் ஏன் தகராறு பண்றாங்க? முதல்வர் பதவி தங்களுக்கே வேணும்னு கோரிக்கை வெச்சாங்களா?

Rate this:
S.Pandiarajan - tirupur,இந்தியா
18-ஆக-201707:18:21 IST Report Abuse

S.Pandiarajanஇங்கு அப்பாவிகள் கருத்து எழுத கூடாது விவரம் தெரிந்தவர்கள் தான் எழுதணும்...

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
18-ஆக-201706:18:51 IST Report Abuse

தாமரை கிராம உதவியாளர்களை முழுநேர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் இது மிகவும் நியாயமான கோரிக்கை தான். இவர்கள் 24 மணி நேரமும் பணி செய்வது உண்மை தான்..இவர்கள் தான் கிராமங்களில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் அரசு சார்பாக நிற்கும் முதல் ஆட்கள்.

Rate this:
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
18-ஆக-201709:55:12 IST Report Abuse

Thulasingam Pillaiஎம்ஜிஆர் செய்த படுபாதகச்செயல்களில் இதுவே முதன்மையானது அருமையான, மக்களை புரிந்து நல்லுறவுடன் பணியாற்றிக் கொண்டிருந்த கனக்குப் பிள்ளை மணியாகி காரர்களையெல்லாம் தூக்கிவிட்டு, அரைகுறையாகப் படித்த இந்த சுயநல கொள்ளைக்கு கூட்டத்தை கிராம நிர்வாகத்தில் புகுத்தியத்தின் விளைவு, மக்களுக்கு சொல்லநாத் துயரங்கள், கிராமத்து எளியோர்களிடம் கூட மனசாட்ச்சியே இல்லாமல் ஆயிரக் கணக்கில் புடுங்கும் மாபாவிகள் இவர்கள். இவர்களின் அறிவினத்தால் அநேக தவறுகளுடனான கணினி உள்ளீடுகள், மீண்டும் அதை திருத்தவும் லஞ்சம் கொடுத்தால் தான் என்ற நிலை இவர்கள் யாருமே சம்பளத்திற்கு வேலை செய்வதில்லை என்பதே உண்மை நிலை இவர்கள் பயன் படுத்தும் அஃறினைப் பொருட்கள் தான் இன்னும் மக்களை லஞ்சம் கேட்கவில்லை...

Rate this:
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
18-ஆக-201705:56:19 IST Report Abuse

Mannai Radha Krishnanஅவிங்க மேற்படி வருமானத்தை கணக்கில் எடுத்து ...திருப்தி அடைந்து இருப்பார். எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி கிடையாது.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement