சி.பி.ஐ., விசாரணை வேண்டும்! பன்னீர் அணி மீண்டும் வலியுறுத்தல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சி.பி.ஐ., விசாரணை வேண்டும்!
பன்னீர் அணி மீண்டும் வலியுறுத்தல்

'எங்களுடைய கோரிக்கைகள், முழுமையாக நிறைவேற்றப்படவில்லை' என, அ.தி.மு.க., - பன்னீர் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 சி.பி.ஐ., விசாரணை, வேண்டும்!,பன்னீர் அணி, மீண்டும் வலியுறுத்தல்

அதன் விபரம்:

எம்.பி., மைத்ரேயன்:தர்ம யுத்தத்தின் முதல் கோரிக்கை, சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். கடந்த வாரம், முதல்வர் தலைமை யில், 27 நிர்வாகிகள் கையெழுத்திட்டு,

தினகரனை வெளியேற்றுவதாக, தீர்மானம் நிறை வேற்றி உள்ளனர். அதேபோல், சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்து, தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

2-வதாக, ஜெ., மரணம் குறித்து,சி.பி.ஐ., விசாரணை க்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், விசாரணைகமிஷன் அமைப்பதாக, முதல்வர் அறிவித்துள்ளார்.கமிஷன் என்பது, கண் துடைப்பாகி விடக்கூடாது. சி.பி.ஐ., விசாரணை கோரி, நீதிமன் றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷன் அமைக்கப் படுவது, சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுமா என்றும் தெரியவில்லை.ஜெ., வீடுஅரசுடமையாக் கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி:


ஜெ., மர்ம மரணம் குறித்து, சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும். முதல்வர் அறிவித்துள்ள, விசாரணை

Advertisement

கமிஷனில், முழுமையான நீதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.அ.தி.மு.க., அணிகள் இணைப்பை சாத்தியமாக்க, சசிகலா குடும்பத் தினரை, கட்சியிலிருந்து முழுமையாக விலக்கி வைக்க வேண்டும். அதேபோல், தேர்தல் கமிஷனில், அவர்கள் கொடுத்துள்ள, பிரமாண பத்திரத்தை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
21-ஆக-201719:09:12 IST Report Abuse

kc.ravindranAIADMK தொண்டர்களே JayaTV நேர்மையான செய்திகளை தருகிறதா என்று கவனியுங்கள் உங்களின் வருங்கால தீர்ப்பிற்கு அது பெரிதும் உதவும்

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
19-ஆக-201718:05:09 IST Report Abuse

kowsik Rishiமுதலில் இவரை சி பி ஐ விசாரிக்கவனேடும் செல்வி ஜெ ஜெ ஏன் உங்களை கட்சி விட்டு துரத்தினார் என்று ஓகே சார் முனிசம்மி

Rate this:
18-ஆக-201720:02:57 IST Report Abuse

Gayathriparameswaranpls thayavu senju dharma uthamnu solathinga pa mudila.tharmamna yenane theriyathavanuga yellam ipudi vecha apo ethics yellathaum asinga paduthura mari iruku.

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
18-ஆக-201718:39:28 IST Report Abuse

Nancyகொலை செய்யப்பட்ட இந்த ஜெயலலிதா இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தால் அடையாளம் காட்டப்பட்ட குற்றவாளி இருந்தாலும் இவர் ஆறு கோடி தமிழர்களின் தலைவி , விசாரணை சரி அது இன்னொரு குமாரசாமி தலைமையிலா கேவலம் , பத்து வருஷம் கழிச்சி விசாரணை அறிக்கை வரும் அப்போ பாதி பயலுவ செத்துருப்பானுக , சிபிஐ விசாரணை ஒன்றே சரியானது இறுதியானது

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
18-ஆக-201717:44:40 IST Report Abuse

kowsik Rishiஜெயலலிதாவால் விரட்டப்பட்ட முனிசாமி பேசுவது என்ன மாம்பழம் கட்சி தானே உங்கள் வேலை

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
18-ஆக-201716:41:58 IST Report Abuse

Giridharan Sஇவரு அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறார் போலும் அதை பெறவேண்டும் என்பதற்காகவே இப்படி பேட்டி கொடுக்கிறார் முதலில் இணையுங்க சார் அப்புறம் பார்த்துக்கலாம். அப்புறம் இவர்களில் யாருக்காவது அமைச்சர் பதவி குடுக்காம போய்ட்டாங்கன்னா அப்புறம் TTV கிட்ட அணிமாறினால் கூட ஆச்சரியப்படறதுக்கு இல்லை

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
18-ஆக-201716:25:48 IST Report Abuse

kc.ravindranசிபிஐ விசாரணைக்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால் ஒன்று சேரும் பிரச்னைக்கே இடம் இல்லை என்று தெளிவாக்க வேண்டும் . மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் சிபிஐ மூலம் கிடைக்கப்பெறும் உண்மைகள் வெளியிடப்படுவதன் மூலமாகத்தான் இருக்கும்.

Rate this:
vanaraj - சென்னை,இந்தியா
18-ஆக-201715:08:50 IST Report Abuse

vanaraj எதாவது ஒரு நல்ல முடிவை எடுங்க ஐயா ?

Rate this:
pravasiya - KALLIKUPPAM,இந்தியா
18-ஆக-201715:08:04 IST Report Abuse

pravasiyaஆதி வாசி(முனுசாமி) கொஞ்சம் அடக்கி வாசி....

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
18-ஆக-201714:37:10 IST Report Abuse

SundaramCBI inquiry is the only way to discover the real fact

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement