கர்நாடகா அணை கட்டலாம்: சுப்ரீம் கோர்ட் Dinamalar
பதிவு செய்த நாள் :
கர்நாடகா அணை கட்டலாம்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:'காவிரியின் குறுக்கே, மேகதாது வில், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகை யில், கர்நாடக அரசு, அணை கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த, காவிரி நடுவர் மன்றம், 2007ல், இறுதித் தீர்ப்பு வழங் கியது;

இதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்சநீதி

மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கி டையே, காவிரியின் குறுக்கே, மேகதாது பகுதியில், கர்நாடகா அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகி றது; இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன் றத்தில் நடக்கிறது. நேற்றைய விசாரணையின் போது, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியதாவது:காவிரியின் குறுக்கே, மேக தாதுவில், கர்நாடகா, தடுப்பணை கட்டுகிறது. இதனால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத

Advertisement

கர்நாடகா,அணை,கட்டலாம்,சுப்ரீம் கோர்ட்

வகையில்,இந்த அணையை கட்டலாம்; தேவை பட்டால், இதை கண்காணிக்க, தமிழக அரசு குழுவை அமைக்கலாம். இதன் மூலம், கட்டு மான பணி மற்றும் பராமரிப்பில் பிரச்னை ஏற் படாதபடி, இரு மாநிலங்களும் பார்த்து கொள்ள முடியும்.இவ்வாறு அமர்வு கூறியது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
18-ஆக-201717:40:49 IST Report Abuse

r.sundaramநாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கச்சொன்ன உச்சநீதிமன்ற உத்தரவை மதியாத கர்நாடகம், தற்போது மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்குமா? தனக்கு சாதகமானால் மட்டுமே தீர்ப்பை மதிக்கும் கர்நாடகாவை நம்பமுடியாது. கர்நாடகாவில் உளள காவிரியின் மீதுள்ள அணைகள் முழுவதையும், மேகதாதுவில் புதிதாக கட்டும் அணையையும் சேர்த்து ஒரு நதிநீர் ஆணையத்தின் கீழ் கொண்டுவந்தால், மேகதாதுவில் கர்நாடக அணைகட்ட சம்மதிக்கலாம். இதற்க்கு கர்நாடகா சம்மதமா?

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
18-ஆக-201715:44:25 IST Report Abuse

Tamil Selvanகாவேரி நதிநீர் ஒப்பந்தத்தை 1974-யில் புதுப்பிக்க அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தவறி விட்டார்... அதன் பிறகு கர்நாடக அரசு அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியின் ஆதரவோடு கபினி, ஹாரங்கி, ஹேமாவதி என்று வரிசையாக அணைகளை கட்டிக்கொண்டு விட்டார்கள்... மேலும் காவேரி நதியின் வழித்தடங்களில் உள்ள ஊர்களில் சுமார் 25000 ஏரி, குளம், குட்டைகளை உருவாக்கிவிட்டு, அந்த நீர்நிலைகளில் நீரை தேக்கிவைத்து கொண்டு எப்பொழுது கேட்டாலும் எங்கள் அணைகளில் தண்ணீரே இல்லை என்று சொல்லும் நிலைமைக்கு வ(ளர்)ந்து விட்டார்கள்... இப்படி 25000 ஏரி, குளம், குட்டைகளை உருவாக்கிவிட்டு கர்நாடகாவில் காவேரி நதியின் பாசனத்தை அன்று 5 லச்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் இருந்து இன்று 25 லச்சம் ஹெக்டர் நிலப்பரப்பாக உயர்த்திவிட்டார்கள்... இன்று நன்கு விவசாயம் செய்து செழுமையை வாழும் கன்னடர்கள் காவேரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள்... இப்படி அணை மேல் அணை கட்டிக்கொண்டதனால் தஞ்சை உட்பட 12 டெல்டா மாவட்டங்கள் உட்பட 40 லச்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து கொண்டு இருந்த தமிழகத்தில் இன்று 20 லச்சம் ஹெக்டர் நிலப்பரப்பாக குறைந்து விட்டது... இந்த லச்சணத்தில் இங்கு மாறி மாறி ஆளும் கழக ஆட்சியில் நாங்கள் விவசாய பொருள்களின் உற்பத்தியை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது என்று புள்ளி விவரம் கொடுக்கிறார்கள் இங்குள்ள புள்ளி ராஜாக்கள் ஒவ்வொரு ஆண்டும்... இங்குள்ள புள்ளி ராஜாக்களை என்ன செய்யலாம் என்று தமிழக மக்கள்தான் சொல்ல வேண்டும்...

Rate this:
royan - bangalore,இந்தியா
18-ஆக-201715:34:19 IST Report Abuse

royanஅட முட்டா மங்குனி அமைச்சர்களே இப்போது ஏன் கர்நாடகாவில் தண்ணீர் திறந்தான் தெரியுமா..? அணை நிரம்பியவுடன் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்தவுடன் கண்டிப்பாக கடலில் கலக்கும். தமிழ்நாட்டில் அணை கட்ட முடியாது. அது சமமான பகுதி என்பதால் நாங்கள் அணை கட்டுகிறோம் . 43 வருடங்களாக எப்படி கர்நாடககாரன் எப்படி அடம் பிடிக்கிறானோ அதுவே தொடரும். இனி தமிழ் நாடு பிச்சை எடுக்கப்போகிறது.. மக்கள் எல்லாம் செத்தபின் யாருக்குடா இந்த அரசாங்கம்.. ?

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஆக-201719:47:24 IST Report Abuse

Rajendra Bupathiஏன் அவுங்கள மாதிரியே நாமும் கவிரியின் குறுக்கே தடுப்பு அணை கட்டலாமே? யாராவது வேணான்ணு சொன்னாங்களா? கொஞ்சமாவது திராவிட கட்சிங்களுக்கு சூடு, சொரணை, மானம், மரியாதை, அறிவு ,ஏதாவு இருக்க வேண்டாமா? அது யாருக்கும் கிடையாது? இங்க தடுப்பணையை கட்டி இருந்தா நாம ஏன் இப்படி அடுத்தவங்ககிட்ட தொங்கனும்? அறிவு இல்லாத அரசுகள் இருக்கிற வரைக்கும் இது தொடரும்? அவுங்க இடத்துல அவுங்க மக்களின் நன்மையை கருதி அவுங்க அணையை கட்டுறாங்க அதுதான் உண்மை? அதை ஏன் இந்த திராவிட மானங்கெட்டதுங்க செய்ய மட்டேங்குது? காரணம் என்ன? தகுதியில்லாத கட்சிகள் ?தகுதி இல்லாத அரசுகள்? தகுதீயில்லாத திராவிட கட்சிகளின் முதல் அமைச்சர்கள்? சாதாரண அத்திகடவு அவினாசி திட்டமே அண்ணாதுரை காலத்துல இருந்து ஒண்ணும் இவிங்க ஆணியை புடுங்க முடியில இவுங்க யோக்கீயதை இப்படி இருக்கு ? அப்புறம் அவுங்கள பத்தி குறை சொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கு? எதுவுமில்லை? இப்படியே போச்சின்னா ஒருகாலத்துல தண்ணீருக்கு நாம பணம் குடுக்குற மாதிரி வந்தாலும் வரும்? எதை சொல்லி எதுக்கு ஆவ போவுது? போங்கடா நீங்களும் ஒங்க கீழ்த்தரமான கேவலமான அரசியலும்?த்.......தூ?...

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
18-ஆக-201714:50:56 IST Report Abuse

Tamil Selvanகர்நாடகாவில் பெங்களூரு குடிநீர் திட்டமும், தமிழகத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று இரண்டு மாநிலங்களும் சமரச அடிப்படையில் ஒப்புதல் பெற்றார்கள்... தமிழக அரசோ ஜப்பான் நாடு 1000 கோடி நிதி ஒதுக்கும் என்று சொல்லிவிட்டு அந்த திட்டத்தை தொடக்கி வைக்க கால தாமதம் செய்து விட்டார்கள்... எனவே தமிழக அரசு இந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்கி வைப்பதற்கு முன்பே, கர்நாடக அரசு காவேரி ஆற்றில் இருந்து பெங்களூரு மாநகருக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டிடத்தை கொண்டுவந்து விட்டார்கள்... அதன்பிறகு தமிழகத்தில் அன்று திமுக ஆட்சியின் பொழுது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டதுக்கு அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒரே பிரச்சனை செய்து வந்தார்கள்... அதே பிரச்சனை தான் இப்பொழுதும்... இப்பொழுது அணை கட்ட அனுமதி பெற்று நல்ல பிள்ளைகள் போல் நடித்து விட்டு, அணை கட்டிவிட்டு தான் பிறகுதான் கன்னடர்கள் நம்மிடம் ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள்...

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
18-ஆக-201714:42:55 IST Report Abuse

Tamil Selvanகர்நாடக அணையை கட்டிக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு தடை இல்லை என்று சொல்ல இந்த அரசு வழக்குரைஞருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.... அதற்கு தமிழக மக்கள் அனைவரிடமும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தட்டும்... அதில் தமிழக மக்கள் என்ன முடிவு சொல்லுகிறார்களோ அதையே முடிவாக கொண்டு அதன் படி செயல்படுத்தட்டும்... அதை விட்டு விட்டு தமிழக வழக்கறிஞர் சொன்னார்... உச்ச நீதிமன்ற நீதிபதியே சொல்லிவிட்டார் என்றெல்லாம் இனி சொல்ல வேண்டாம்... ஜனநாயக நாட்டில் மக்கள்தான் பெரிய நீதிபதிகள்... மக்கள் சொல்வதுதான் சட்டம்.... ஆட்சியாளர்களோ இல்லை அரசு அதிகாரிகளோ இல்லை அரசியல்வாதிகளோ அல்ல...

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
18-ஆக-201714:27:43 IST Report Abuse

Tamil Selvanகடந்த 2008-2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப்படுகொலையின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் அன்று ஈழப்படுகொலை என்றும் ஒன்றே நடந்து இருக்காது... காரணம் மத்தியில் 40-க்கு 40-பாராளுமன்ற உறுப்பினர்கள்... மேலும் 14 மத்திய அமைச்சர்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை... காரணம் திமுக ஆதரவை திருப்ப பெறும் முடிவில் உறுதியாக இல்லை... மேலும் அதனை வைத்து திமுகவை குற்றம் சொல்லத்தான் எல்லோரும் இருந்தார்களே தவிர, மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று பட்டு ஒரே அணியாக கூட இருந்து தடுத்து நிறுத்தி இருக்கலாம்... அதனை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, எந்த அரசியல் கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை... எனவே, இப்பொழுது தமிழகத்தின் உரிமையை கர்நாடக பறித்து கொள்ள தயாராக இருக்கிறது... இதனை ஆளும் அண்ணா திமுக கட்சி இதனை தடுத்து நிறுத்தி விடும்... இல்லை தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவினர்கள் தடுத்தி நிறுத்தி விடுவார்கள்.... மத்தியில் ஆளும் மோடி அரசு தடுத்து நிறுத்தி விடுவார்கள்... இல்லை தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தடுத்தி நிறுத்தி விடுவார்கள்... இல்லை அந்த கட்சி தடுத்து நிறுத்தி விடும்... இந்த கட்சி தடுத்தி நிறுத்தி விடும் என்று யாரும் எண்ண வேண்டாம்... காரணம் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள கட்சிகள் எல்லாமே தங்களின் மாநிலத்திற்குள்தான் அடித்து கொள்வார்கள்... அதுவே தங்களின் மாநிலத்துக்கும் பக்கத்துக்கு மாநிலத்துக்கும் ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் கட்சி வேறுபாட்டை மறந்து ஒன்று கூடி விடுவார்கள்... ஆனால் தமிழகத்தில் உள்ள திராவிட கலாச்சாரம் அதற்கு அனுமதிக்காது... எனவே ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் போல் தமிழகம் தழுவிய ஒரு தன்னெழுச்சி போராட்டம் ஒன்றுதான் இந்த கர்நாடக அணை பிரச்சனைக்கு முடிவு கட்டும்...

Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
18-ஆக-201714:13:51 IST Report Abuse

Tamil Selvanதமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்டே, 'தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் தடையில்லை என்றால், கர்நாடக காவிரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை' என்று சொல்லியிருக்கிறார்... இவ்வாறு காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழகத்துக்கின் சார்பில் தடை இல்லை என்று கூறுவதற்கு இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?... இவரின் இந்த செயலுக்கு பொதுப்பணித்துறை அமைச்சகத்தை தன்னகத்தே வைத்து கொண்டு இருக்கிற தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் என்ன விளக்கம் சொல்லப் போகிறாராம்?...

Rate this:
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-201714:10:36 IST Report Abuse

Murugesanஉச்ச நீமன்றம் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைகின்றது ,நீதியை தவிர மற்றதை தான் செய்கின்றது , மக்களுக்கு இவர்கள் இல்லை , நாட்டை சீக்கிரம் சுடுகாடாக்க தமிழக அடிமை அமைச்சர்களும் இந்த நீதிமான்களும் பீஜேபியின் அராஜக செயல்களுக்கு துணையாக செயல்படுகிறார்கள் ,மூன்று அணை கட்டிவிட்டு தண்ணீர் தரமறுக்கும் நியாயமற்றவர்களுக்கு நாலாவதுதாக ஒரு அணையை கட்டி தண்ணீர் தரலாம் என்கின்ற இந்த அதிபுத்திசாலிகள் இந்த நாட்டின் நீதிபதிகள் , , வாழ்க சீக்கிரம் சுடுகாடாகிக்கிட்டிங்க , மோடிஜி

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஆக-201719:54:56 IST Report Abuse

Rajendra Bupathiஇல்லை தங்கள் கருத்தை கொஞ்சம் பரிசீலனை செய்யலாம்? நீதிமன்றம் தகுந்த நீதியை தான் கூறி இருக்கிறது? எதையும் அரசியல்வாதி போன்று மேம் போக்காக பார்க்க வேண்டாம்? அவர்கள் இடத்தில அவர்கள் அணை கட்டி கொள்ள உரிமை உள்ளது அதைதான் உச்ச நீதிமன்றமும் கூறி உள்ளது? இங்கு அரசியல் ஆதாயத்திற்காகவே காவிரியின் குறுக்கே அணை கட்ட மறுக்கிறார்கள்? இதை ஊடகங்களும் தவறாகவே சித்தரித்து செய்தியை வெளீயிடுகிறார்கள் ?...

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
18-ஆக-201712:51:13 IST Report Abuse

Ramesh Sundramகாவேரியை வைத்து கொள்ளுங்கள் எங்கள் அம்மாவை விட்டு விடுங்கள் என்று போஸ்டர் ஒட்டிய புண்ணியவான்கள் நமது கூன் பாண்டி கூமுட்டைகள் மேகதாது அணை கட்டி விட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் அம்போ

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
18-ஆக-201719:48:26 IST Report Abuse

Rajendra Bupathiபாவம் வாங்குன காசுக்கு கூவி இருக்கானுவோ? உடுங்கப்பு?...

Rate this:
R chandar - chennai,இந்தியா
18-ஆக-201712:43:33 IST Report Abuse

R chandarDam can be constructed by karnataka provided they agreed to release water to kaveri as stipulated by cauvery management committee now. If water sharing been agreed by karnataka as per supreme judgement then they can construct dam.

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement