தனியார் நிறுவனத்திடம் சிக்கியுள்ள ரூ.1,000 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தனியார் நிறுவனத்திடம் சிக்கியுள்ள
ரூ.1,000 கோடி நிலத்தை மீட்பதில் அலட்சியம்

ஜி.எம்.ஆர்., நிறுவனத்திடம் உள்ள, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை திரும்பப்பெற, மின் வாரியம் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனியார் நிறுவனம்,Private company, நிலம் , land,அலட்சியம்,negligence, ஜி.எம்.ஆர்., GMR, மின் வாரியம், power board, குற்றச்சாட்டு , indictment, சென்னை, Chennai, பேசின்பிரிட்ஜ், Chennai, எரிவாயு மின் நிலையம்,gas power plant, மின் கொள்முதல் ஒப்பந்தம், power purchase agreement, அரசியல் ,politics, மின்சாரம் , electricity,

சென்னை, பேசின்பிரிட்ஜ் அருகில், மின் வாரி யத்துக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அதில், 196 மெகாவாட் திறனில், எரிவாயு மின் நிலையம் அமைக்க, 29 ஏக்கர் நிலத்தை, ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனத்திற்கு, மின் வாரியம், குத்தகைக்கு விட்டது; தனியார் மின்சாரத்தையும் கொள்முதல் செய்தது.

மின் கொள்முதல் ஒப்பந்தம், 2015 பிப்ரவரியில் முடிந்தாலும், அந்த இடத்தை திரும்பப்

பெறுவதில், மின் வாரியம் அலட்சியம் காட்டி வரு கிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜி.எம்.ஆர்., நிறுவனத்துடன், 1996 செப்., 12ல், மின் கொள்முதல் ஒப்பந்தம்செய்யப்பட்டது. அப்போது, நிலத்தின் குத்தகை காலம், 22 ஆண்டுகளாக நிர்ண யிக்கப்பட்டது. 1997ல் செய்த வாடகை ஒப்பந்தத் தில், 20 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

ஒரு மாத வாடகை, 30 லட்சம் ரூபாயில் இருந்து, 15 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.மின் கொள் முதல் ஒப்பந்த காலம், 2014 பிப்., மாதம் முடிந்து, பின், ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. பல அரசியல் குறுக்கீடுகள் வந்தும், ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை.

குத்தகை காலம் முடிந்ததால், மூன்று மாதங்களுக் குள் தளவாடங்களுடன், இடத்தைகாலி செய்யு மாறு, மார்ச்சில், நோட்டீஸ் தரப்பட்டது. அந்நிறு வனத்திடம் இருந்து, ஜூன், 30 வரை, எந்த பதிலும் வராததால், மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு, 'இடத்தை காலி செய்ய ஓராண்டு அவகாசம் வேண்டும்' என, பதில் கிடைத்தது.அந்நிறுவனத் திற்கு, இடத்தை காலி செய்ய விருப்பம் இல்லாதத

Advertisement

தால் தான் அவகாசம் கேட்கிறது. இதே நிலை தொடர் ந்தால், அரசியல் நெருக்கடியால், அதனிடம் இருந்து மீண்டும் மின்சாரம் வாங்க வேண்டி வரும்.

அதை தவிர்க்க, 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, அதிரடியாக திரும்ப பெற்று, அங்கு என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆராய, தனி குழு அமைக்கப்பட உள் ளது. இரு மாதங்களில், இடத்தை திரும்ப பெற்று விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (5)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-ஆக-201711:20:38 IST Report Abuse

Cheran Perumalஇந்த ஜி எம் ஆர் குரூப் எங்கெல்லாம் வாடகைக்கு/குத்தகைக்கு இடம் பிடித்தார்களோ அங்கெல்லாம் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து கடைசியில் இடம் திரும்ப கிடைத்தால் போதும் என்று இடத்து சொந்தக்காரர்கள் கோர்ட்டில் போட்டு திரும்ப வாங்கவேண்டிய சூழ்நிலை. பல வருட வாடகையை இந்த நிறுவனம் கொடுக்காமல் ஆட்டையை போட்டுவிட்டது.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
18-ஆக-201709:58:28 IST Report Abuse

IndhuindianThere is nothing strange in this. The agreement with TNEB expired long ago and TNEB should have resumed this prime land (where once its power plant stood and was demolished and given to this private party for a private power project). Even when the agreement was in force, there were litigations about determination of lease rent for the said land. If TNEB has not resumed the land even after several years, it raises serious doubts about its true intentions.

Rate this:
sundara - tirunelveli,இந்தியா
18-ஆக-201708:36:29 IST Report Abuse

sundaraSomeone may be thinking to built flats there?

Rate this:
srisubram - Chrompet,இந்தியா
18-ஆக-201707:22:12 IST Report Abuse

srisubramஇதோடா , சூப்பர் கருத்து.. யாரு அப்பன் வீடு சொத்தாம்? ..இப்படி இருக்கிறதுனாலதேன் எல்லாரும் நம்மள இறுக்குகிறார்கள்.. அம்பானி , அதானி, சசி மட்டும் கொள்ளையர்கள் என்று நினைக்காமல் , தீங்கு செய்பவர்கள் அனைவரையும் தட்டி கேளுங்கள் ..

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
18-ஆக-201706:06:42 IST Report Abuse

சந்தோசு கோபுஅட போகட்டும் விடுங்க...யாரு அப்பன் வீட்டு சொத்து? மக்கள் பணம் தானே.. எவ்வ்வளவோ போச்சு.. அதிமுக மாஃபியா இந்நேரம் பங்கு போட்டுட்டு இருக்கும்..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement