BJP receives maximum funding from corporate donors, says report | கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை; பா.ஜ., முதலிடம்| Dinamalar

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை; பா.ஜ., முதலிடம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
அதிக நன்கொடை,maximum funding,More donation, கார்ப்பரேட் நிறுவனங்கள்,corporate donors, நன்கொடை,Donation, பா.ஜ.,BJP, புதுடில்லி, New Delhi, தேர்தல் கமிஷ, Election Commission, தேசிய கட்சிகள் ,National Parties அசோஷியேசன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்,Association for Democratic Reforms, ஏ.டி.ஆர்.,ATR, காங்கிரஸ் ,Congress, தேசியவாத காங்கிரஸ்,Nationalist Congress,   ரியல் எஸ்டேட் தொழில், Real Estate Industry,
Share this video :
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை;பா.ஜ.,முதலிடம்
Powered by Sathya

புதுடில்லி: கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்றதில் பா.ஜ., முதலிடம் பிடித்துள்ளது. அக்கட்சி, கடந்த 4 ஆண்டுகளில் 2,987 ரூ.705.81 கோடி நன்கொடை பெற்றுள்ளது.


5 தேசிய கட்சிகள்:


தேர்தல் கமிஷனில், கடந்த 2012-13ம் நிதி ஆண்டில் இருந்து 2015-16-ம் நிதிஆண்டு வரை தேசிய கட்சிகள் சமர்ப்பித்த நன்கொடை விவரங்களை டில்லியை சேர்ந்த ‛அசோஷியேசன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்(ஏ.டி.ஆர்.,)' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ., காங்., உள்ளிட்ட 5 தேசிய கட்சிகள், மொத்தம் ரூ.1,070 கோடியே 68 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது. இவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மட்டும் ரூ.705.81 கோடி நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


பா.ஜ., முதலிடம்:


கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்றதில் பா.ஜ., கட்சிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அக்கட்சி, கடந்த 4 ஆண்டுகளில் 2,987 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.705 கோடியே 81 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது. 2 மற்றும் 3ம் இடங்கள் முறையே காங்கிரஸ் கட்சியும்(ரூ.198.16 கோடி), தேசியவாத காங்கிரஸ் கட்சியும்(ரூ.50.73 கோடி) பிடித்துள்ளன. 4 மற்றும் 5ம் இடங்கள் முறையே சி.பி.எம்.,(ரூ.1.89 கோடி), சி.பி.ஐ.,(ரூ.18 லட்சம்) கட்சிகள் பிடித்துள்ளன.


ரியல் எஸ்டேட்:


பா.ஜ., காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளுக்கு பெரும்பாலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிக நன்கொடை தந்துள்ளன. குறிப்பாக சத்யா எலெக்டோரல் டிரஸ்ட் என்ற நிறுவனம் மட்டும் ரூ.261 கோடி நன்கொடை அளித்துள்ளது.


ரூ.20 ஆயிரத்துக்கு மேல்...


அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை விவரங்களை, ஒவ்வொரு நிதியாண்டும் தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும். ரூ.20 ஆயிரம்வரை நன்கொடை பெற்றால், நன்கொடை அளித்தவரின் விவரங்கள் தேவையில்லை. அதற்கு மேல் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை தேர்தல் கமிஷனில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (84)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஆக-201709:10:38 IST Report Abuse
g.s,rajan India is nowadays run by Corporate sectors which is quite evident. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
18-ஆக-201720:15:23 IST Report Abuse
grg எல்லா கட்சிகளும் நன்கொடை வாங்கியுள்ளன . தங்கள் தகுதிக்கு ஏற்ப நன்கொடை வாங்காத (வராத அல்ல ) கட்சி இது பற்றி குறை சொல்லட்டும்...
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
18-ஆக-201718:41:11 IST Report Abuse
yaaro "காங்கிரஸ் அப்னி துகான் ஹை " - அப்படின்னு சொன்னவர் யார், எப்போ ?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஆக-201717:20:18 IST Report Abuse
g.s,rajan இந்தியாவை கார்பொரேட் நிறுவனங்கள் தான் நடத்துது அரசாங்கம் டம்மி ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
18-ஆக-201716:54:50 IST Report Abuse
புதுகை வானம்பாடி திருடி கொடுத்தாலும் கட்சி காரங் வாங்கிக்குவாங்களோ ?????
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
18-ஆக-201716:53:23 IST Report Abuse
புதுகை வானம்பாடி தமிழ் நாட்டுல புடுச்ச கன்டைனர் பிஜேபி கணக்குல ஏறி இருக்குமோ ???
Rate this:
Share this comment
Cancel
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
18-ஆக-201716:51:45 IST Report Abuse
புதுகை வானம்பாடி ரூபாய் ஐம்பதாயிரம் மேல் வங்கியில் பணம் எடுத்தால் அல்லது கட்டினால் வருமான வரி கணக்கு அவசியம் ...... இது மோடி மஸ்தான் சட்டம் .......... 950 கோடி பணம் எந்த (இது கணக்கில் மட்டும்) இந்த நாட்டில் சிபிஐ .... லஞ்ச ஒழிப்பு துறை , வருமான வரி துறை இருந்தால் ஏங்கியருந்து வந்தது என நிருபிங்க பார்ப்போம் ....இதற்கு பெரு தூய்மை இந்தியா ...... வெட்க கேடு ......
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
18-ஆக-201716:46:09 IST Report Abuse
Subburamu Krishnaswamy இதுவும் ஒருவகை ஊழல்தான்
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
18-ஆக-201716:44:38 IST Report Abuse
Tamil Selvan தில்லு முல்லு கட்சியில் கடந்த தேர்தலில் ஒரு மாவட்ட செயலாளரோ 100 கோடிக்கும் மேல் நன்கொடையை வசூலித்து தருகிறார்.... அப்படி என்றால் தமிழ் நாட்டில் மொத்தமா எவ்வளவு நன்கொடை வசூலித்து இருப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
ilicha vaayan - chennai,இந்தியா
18-ஆக-201716:23:39 IST Report Abuse
ilicha vaayan எல்லாரும் கார்பொரேட் நிறுவனங்களை திட்டுவதால் , எனக்கு ஒரு யோசனை. நாம் எல்லாரும் பின் பற்றலாம் . காலை எழுந்தவுடன் பல் தேய்க்க , பற்பசை வேண்டாம் ( வெப்பம் குச்சு , ஆலம் குச்சி ), அப்புறம் paaryware கம்மோடே வேண்டாம் . அப்புறம் கார்பொரேட் பதப்படுத்தும் பால் வேண்டாம் . கார்பொரேட் உணவுப் பொருள் வேண்டாம் , கார்பொரேட் , அப்புறம் கார்ப்பரேட் கார் பைக் எல்லாம் கார்பொரேட் , அப்புறம் இன்டர்நெட் ரிலையன்ஸ் ஜியோ , பிரெஷ் , பெற்றோ எல்லாமே கார்பொரேட் . பெரிய வீடு , கட்டடம் எல்லாம் கார்பொரேட் தான் . அதுனால எல்லாரும் கார்பொரேட் வேண்டாம்னு புறக்கணிச்சா , என்ன ஆகும். எல்லாரும் கார்பொரேட் ஆ திட்டுறீங்க ஆனா நீங்க தான் அவங்களை வூக்குவிக்கிறீங்க , நாம் தப்பு பண்ணிட்டு அவங்கள திட்டினா என்ன அர்த்தம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.