சீனாவுக்கு 'செக்' வைக்க மத்திய அரசு தீவிரம்! Dinamalar
பதிவு செய்த நாள் :
தீவிரம்!
சீனாவுக்கு 'செக்' வைக்க மத்திய அரசு...
மின்துறை முதலீடுகளில் புதிய கட்டுப்பாடுகள்

புதுடில்லி: மின்சார பகிர்மானம் மற்றும் தொலை தொடர்பு துறைகளில், 'சைபர்' தாக்கு தலை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், இந்தத் துறைகளில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவை குறிவைத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சீனா,China,செக் ,Check, மத்திய அரசு,Central Government, புதுடில்லி, New Delhi,மின்சார பகிர்மானம்,  Electricity Distribution, தொலை தொடர்பு துறை, Telecommunication, பாதுகாப்பு , Security,சைபர், Cyber,  மொபைல் போன் , Mobile phone,  மொபைல் போன் விற்பனை,mobile phone sales, இந்தியா, India, முதலீடு,investment, அமெரிக்கா,America,ஆப்பிள், apple,  கொரியா, Korea,சாம்சங், Samsung, மைக்ரோமாக்ஸ், microcompass, எல்லை பிரச்னை, border dispute,

நம் நாட்டில் பல்வேறு தொலைத் தொடர்பு சேவை வழங்குவதிலும், மொபைல் போன் விற்பனையிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன; மின்சார பகிர்மான வசதிகள் வழங்குவதிலும் பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.

மின் பகிர்மானத்துக்கான கருவிகளை, சீனா வை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவை, பாதுகாப்புக்கு ஆபத்தான வை என, நம் நாட்டு நிறுவனங்கள் கூறி வரு கின்றன. 18 மாநிலங்களில், மின்சார பகிர்மான வேலைகளில், சீன நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.

சைபர் தாக்குதல் நடந்தால், பல மாநிலங்களில் மின் வினியோகம் பாதிக்கும் அபாயம் உள்ள தாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில்,

மின் வினியோக வசதி அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை, மத்திய மின்சார ஆணையம் உருவாக்கி வருகிறது.

அதன்படி, இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவ னங்கள், 10 ஆண்டுகள் இந்தத் தொழிலில் இருந்தி ருக்க வேண்டும். அதன் தலைமை நிர்வாகத்தில், இந்தியர்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,குறிப்பிட்ட காலத்துக்கு, இந்தியாவில் வசித்துஇருக்க வேண்டும்.

மின் பகிர்மான கருவிகளுக்கான மூலப் பொருட்கள், எங்கிருந்து வாங்கப்படுகின்றன, என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். இந்த கருவிகள் தரம் குறைந் ததாக இருந்தால், அந்த நிறுவனம், நம் நாட்டில் எங்குமே செயல்பட முடியாது. இதுபோன்று பல் வேறு கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய மின்சார ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த வரைவு அறிக்கைகளில், சீனாவின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தி யாவில் பெரும்பாலான மின் பகிர்மான திட்டங் க ளில், சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளன.மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால், சீன நிறுவனங் களின் ஆதிக்கம் தகர்க்கப்படும் சூழல் உருவாகும் என, தொழில் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சீன நிறுவனங்கள் புலம்பல்


சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாககாணப் படும், தொலைத் தொடர்பு துறையிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, கட்டுப்பாடுகள் விதிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.நம் நாட்டில் உற்பத்தி செய்யும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 21 நிறுவனங்களுக்கு, மத்திய மின்னணு மற்றும்தகவல் தொழில்நுட்பத் துறை, சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 'உங்களுடைய

Advertisement

மொபைல்போன்களின் பாதுகாப்பு அம்சங்கள், அதன் தரத்தை உறுதி செய்வதற்கான வழி முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப விபரங் களை அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; அமெரிக்கா வின், ஆப்பிள், கொரியாவின், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், நம் நாட்டைச் சேர்ந்த, மைக்ரோமாக்ஸ் நிறுவனத்துக்கும், இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

'சைபர் தாக்கு தலை தடுக்கும் வகையிலும், பாதுகாப்புக்காக வும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது, குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் எதிரான நடவடிக்கை இல்லை' என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும், இந்தியா-சீனா இடையே, எல்லை பிரச்னை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தால், தங்களை ஒடுக்க சதி நடப்பதாக, சீன
நிறுவனங்கள் புலம்பி வருகின்றன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kailash - Chennai,இந்தியா
19-ஆக-201722:51:01 IST Report Abuse

Kailashஒப்போ, விவோ, ஜியோனி, ஜியோமி, ஒன் பிளஸ், லெனோவா, மோட்டோ மற்றும் பல சீனா தயாரிப்பு அதுபோக micromax , karbon போன்ற இந்தியா நிறுவனங்கள் அங்குள்ள சீன கம்பெனிகளோடு கைகோர்த்து லேபில் மட்டும் ஒட்டி இந்தியாவில் விற்பனை செய்கின்றனர். மொபைல் போன் சந்தை அனைத்தும் சீன நிறுவனங்களே அபகரித்து விட்டன, அவர்களுக்கு ஏறக்குறைய 1000 முதல் 2000 வரை மட்டுமே தயாரிப்பு செலவு விற்பனை மாடல்களை பொறுத்து 10000 முதல் 40000 வரை விற்கின்றனர் முதலில் ஆன்லைன் விற்பனையை மக்கள் புறக்கணிக்க வேண்டும் அதுவும் ஜியோமி (ரெட்மி) நிறுவனம் அவர்கள் விரும்பும்போது மட்டுமே விற்பனை துவங்குவர் அந்த நேரம் முண்டியடித்து அவர்கள் பொருளை வாங்கும் அறிவில்லாத மக்களை குறை சொல்லவேண்டும் ஒரு வியாபாரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கட்டுப்படவேண்டும் இதுதான் சீன நிறுவனமாச்சே அங்கேதான் ஜனநாயகம் கிடையாதே... அனைத்து நிறுவனங்களும் கூகிள் ஆண்ட்ராய்டு customise என்ற பெயரில் அவர்களின் spyware , bloatware இணைத்துதான் தருகின்றனர் ஒவ்வொரு நபரின் IP அட்ரஸ், லொகேஷன், அடிக்கடி உபயோகிக்கும் ஆப்ஸ், type செய்யும் keyboard password கூட கண்காணிக்க முடியும். இதை வைத்து ஹேக்கர்கள் எந்த வித தாக்குதலையும் ஏற்படுத்த முடியும் உதாரணமாக அடிக்கடி உபயோகிக்கும் ஆப்ஸ் என்ன வென்று கண்காணித்து அந்த ஆப்ஸ் சில் உள்ள குறைபாடை வைத்து அத்தனைபேர் நடவடிக்கைகளை முடக்கலாம் இதனால் அந்த நிறுவனம் அல்லது வாடிக்கையாளர்கள் சிக்கல் ஏற்படுத்தி தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் உள்ளது டிஜிட்டல் இந்தியாவில் இவ்வளவு பெரிய ஓட்டையை இப்போதுதான் கண்டுபிடித்துள்ளனர்.

Rate this:
Madhav - Chennai,இந்தியா
19-ஆக-201720:15:54 IST Report Abuse

Madhavஅனைத்து சீன பொருட்களும் தரம் குறைந்தவை, சூழலுக்கு உகந்தவை அல்ல....அனைத்து இறக்குமதி முனையங்களிலும் சீனாவில் இருந்து வரும் பொருட்களை, மிக நுணுக்கமாக கவனித்து, எதாவது ஒரு காரணம் கூறி திருப்பி அனுப்பினால் ஆட்டம் மாறும். ஆயிரம் குறைகள் அவற்றில் இருக்கும் நிலையில் ஒன்றை கண்டு பிடிப்பது, மிக எளிது. அரசாங்கம் மனது வைத்தல் இதனை எளிதாக செய்யலாம். வெத்து வெட்டு மேடை நடிகர்களிடம் செயலை எதிர்பார்ப்பது, நமது தவறு.

Rate this:
ram, nigeria - Lagos,நைஜீரியா
19-ஆக-201715:39:50 IST Report Abuse

ram, nigeria ஹாய் பிரெண்ட்ஸ், சமீப காலமாக, ஸ்மார்ட் தொலைபேசிகளில் , சீனா மொழியில் சிரிப்பு வீடியோ அதிகம் பகிரப்படுகின்றன . நம்மில் எத்தனை பேர் இதை கவனித்திருக்கிறோம் ? நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் , அந்த வீடியோவில் spywhere or malware இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்று . அதிகம் பகிர்த பின் அதை அழிக்காமல் இருக்கும் போது எதிர்காலத்தில் ஒருநாள் நம் அதிர்ச்சி அடைய போவது உண்மை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒருநாளில், உங்கள் ஸ்மார்ட் போன் மொத்தமாக அழிக்கப்படலாம் . சுதாரித்து கொள்ளுங்கள் நண்பர்களே

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஆக-201715:23:25 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ இந்தியா-சீனா இடையே, எல்லை பிரச்னை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தால், தங்களை ஒடுக்க சதி நடப்பதாக, சீன நிறுவனங்கள் புலம்பி வருகின்றன. //// அட .... மோதியோட அதிரடியே அதிரடி ..... நடவடிக்கையைத் துவக்கும்போதே அவனுகளைக் கதற வெச்சுட்டாரே ????

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஆக-201715:20:17 IST Report Abuse

Nallavan Nallavanநான் உட்படப் பலர் எழுதியிருக்கிறோம் சீனத் தயாரிப்புக்களை புறக்கணிக்க வேண்டும் என்று ..... சொல்லவும், கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது ..... ஒரு எலக்ட்ரானிக் சாமான் தேவை என்று எங்கே போனாலும் சீனத் தயாரிப்புதான் ..... HDD to USB connector / converter, தொடங்கி குழந்தைகளுக்கான Electronic Piano வரை அனைத்தும் சீனத் தயாரிப்பே ..... சீனாவுக்கு எச்சரிக்கை விடும் பிரதமர் சிந்திக்க வேண்டும் .....

Rate this:
shankar - chennai,இந்தியா
19-ஆக-201713:02:41 IST Report Abuse

shankarஇது ஒரு கண் துடைப்பு மற்றும் சீனாவை அச்சுறுத்தத்தான் தவிர வேறு ஒன்றும் இல்லை, இந்த அரசு சென்ற காங்கிரஸ் அரசு போல் அல்லாமல் மக்கள் மீது உண்மையில் அக்கறை கொண்டு இருந்தால் சீனாவை அச்சுறுத்துவதை விடுத்து அணைத்து சீன பொருட்களையும் மக்களின் நலன் கருதி உடனே தடை செய்யவேண்டும். இந்த கருத்தை ஏற்கெனவே பலமுறை பதிவும் செய்துள்ளேன்.

Rate this:
Shriram - Chennai,இந்தியா
19-ஆக-201717:44:02 IST Report Abuse

Shriramஇது போர் மூண்டால் மட்டுமே சாத்தியம்,, சர்வதேச வர்த்தக விதிமுறைகளை நம் இஷ்டத்துக்கு மீற முடியாது சார்,...

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
19-ஆக-201712:54:31 IST Report Abuse

Mohan Nadarமுதலில் சீனா பட்டாசை நிறுத்துங்கடே ... அதை உங்களாலே நிறுத்தமுடியாது ,ஆனால் எங்களை மட்டும் வாங்கக்கூடாது என்று சொல்லுறிங்களே ...

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-ஆக-201712:30:00 IST Report Abuse

N.Kaliraj அனைத்துமே உடனடியாக செயல்படுத்த வேண்டும்....

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஆக-201712:28:44 IST Report Abuse

Pasupathi Subbianசீன தயாரிப்புகள் இப்போது இந்திய சந்தையில் அதிக அளவு ஊடுருவி உள்ளன. இதை கட்டுப்படுத்த அரசு எடுத்த முதல் படி நடவடிக்கை இது. இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று எதிர்பாக்கலாம்.

Rate this:
Shriram - Chennai,இந்தியா
19-ஆக-201712:02:35 IST Report Abuse

Shriramபிஜேபிக்கு வோட்டு போடுங்க .. 65 வருஷம் குடுத்தீங்களே ? சூனியா காங்கிரசுக்கு,, இன்னும் ஒரு முறை கொடுத்துப் பாருங்கள்.. இந்தியன்னா ஒரு தெம்பு வரும்,, நாட்டுக்கா நம் முன்னோர்கள உயிரையும் கொடுத்தார்கள்,, நாம் என்ன செய்துவிட்டோம் என்று யோசியுங்கள் ,, சில நல்லவர்களைத் தவிர எல்லோரும் நாட்டை எப்படி எண்ணப்படி ஏமாற்றலாம் என்றுதானே பார்த்தோம். .. அதன் விளைவு தான் இன்று இந்த நிலை,, சிந்தியுங்கள்,, எக்காரணம் கொண்டும் மோடியை கைவிடாதீர், நாம், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று சீனனை தூண்களில் விடும் தலைவர்தான் நமக்கு வேண்டும், அடிபணிந்து நாய் போல் வாலாட்டும் கூட்டமல்ல.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement