தமிழக அரசை கவிழ்க்க லண்டனில் வியூகம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகம், Tamilnadu,லண்டன்,London, வியூகம், Strategy,தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive Chairman Stalin,  தினகரன் தூதர், Dinakaran Ambassador,தினகரன்,Dinakaran , தமிழக அரசு ,Tamilnadu Government,  ஸ்டாலின், Stalin, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அ.தி.மு.க., ADMK, பன்னீர்செல்வம், Panneerselvam, பெங்களூரு சிறை, Bengaluru Prison, சசிகலா, Sasikala, அறுவை சிகிச்சைகள் , Surgeries,சட்டசபை, Assembly

தனிப்பட்ட பயணமாக, லண்டன் சென்றிருந்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, அங்கு, தினகரனின் துாதர் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம், Tamilnadu,லண்டன்,London, வியூகம், Strategy,தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK Executive Chairman Stalin,  தினகரன் தூதர், Dinakaran Ambassador,தினகரன்,Dinakaran , தமிழக அரசு ,Tamilnadu Government,  ஸ்டாலின், Stalin, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அ.தி.மு.க., ADMK, பன்னீர்செல்வம், Panneerselvam, பெங்களூரு சிறை, Bengaluru Prison, சசிகலா, Sasikala, அறுவை சிகிச்சைகள் , Surgeries,சட்டசபை, Assembly

தமிழக அரசைக் கவிழ்க்கவும், அதன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், இருவரும் பேசியதாகத் தெரிகிறது. ஸ்டாலின் நாளை, லண்டனிலிருந்து திரும்பியதும், அதற் கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. அ.தி.மு. க.,வின், 135 எம்.எல்.ஏ.,க்களில், தற்போதைய நிலவரப் படி, முதல்வர் பழனிசாமி அணியில், 104; தினகரன் அணியில், 20; பன்னீர்செல்வம் அணியில், 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

ஆலோசனை

முதல்வர் பழனிசாமி அணியும், பன்னீர் செல்வம் அணியும் இணையும் பட்சத்தில்,

115 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கிடைக்கும். ஆட்சி யைதக்கவைக்க, 117 எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும் என்பதால், மேலும் இரண்டு பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. முதல்வர் பழனி சாமி அணி யும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்து விட்டால், தினகரன் அணியில் உள்ள, 20 எம்.எல்.ஏ.,க்களில் சிலர், தங்கள் அணியை ஆதரிக்கக் கூடும்; ஆட்சி கவிழ்ப்புக்கு வாய்ப்பு இருக்காது என, முதல்வர் பழனி சாமி தரப்பினர் கருதுகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில், நேற்று சசிகலாவை சந்தித்து,வெளியே வந்த தினகரன், 'சசிகலா, சில ஆலோசனைகளை, எங்களுக்கு வழங்கியிருக்கிறார். அதன்படி, அடுத்தடுத்து, சில அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்' என் றார்.இதையடுத்து,நேற்று மாலை, சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்ட லில், தினகரன் அணியைச்சேர்ந்த, எம்.எல்.ஏ.,க் களும், ஆதரவாளர்களும், ஆலோசனை நடத்தினர்.
அதில், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட, ஐந்து, எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் அணிக்கு இழுப்பது குறித்து பேசியுள்ளனர். தினகரன் அணி,
எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வெளியூருக்கு செல்ல வேண்டாம் என்றும், அவர்கள் அனைவரும்,

Advertisement

சென்னையில் தங்கியிருக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழிலதிபர்


இந்நிலையில், லண்டனில் தங்கியிருந்த ஸ்டா லினை, தினகரனுக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர், நேற்று முன்தினம் சந்தித்து பேசிய தகவல் தெரிய வந்துள்ளது. அப்போது, ஆட்சி கவிழ்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக வும், அதற்கான, எம்.எல்.ஏ.,க்கள், 'கணக்கு' மற்றும், 'கவனிப்பு' பற்றியும் பேசப் பட்டதாக, தினகரன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாளை ஸ்டாலின், சென்னை திரும்புகிறார். விரைவில், பழனிசாமி அரசு மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, தி.மு.க., வின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட வல்லு னர்களுடன், அவர் ஆலோசனை நடத்துவார் எனவும், தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
சட்டசபையில், தி.மு.க., சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில்,
தி.மு.க.,வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க, தினகரன் அணி தயாராக இருப்பதாக வும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
19-ஆக-201723:03:52 IST Report Abuse

Rajasekaranஇன்றைய கால கட்டத்தில் திராவிட இயக்கங்கள் வேண்டாம் யாருக்கு ஒட்டு அளிப்பீர்கள் எல்லோரும் ஒன்றே யார் மக்கள் நலநீர்க்காகே செய்கிறார்கள் அவர்கள் அவர்களுடைய சுய லாபத்திற்கே செய்கிறார்கள் ஒரு நல்ல அரசியல் வாதிகள் உண்டா எல்லாரும் அவர்களுடைய சொத்தை காப்பாற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள் தவிர மக்களுடைய நலனுக்காக அல்ல இதில் ஜாதி கட்சிகள் வேறு ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னார் ஜாதிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் உயரே செல்லும் ஜாதியை வைத்து சில அரசியல் கட்சிகள் தங்களுது சுய லாபத்திற்கு மக்களை பயன்படுத்திக் கொள்வார்கள் நீங்கள் உண்மையிலே ஒரு இந்தியனாக இருந்தால் ஒரு நல்ல மனிதனுக்கு ஒட்டு போடுங்கள் அவன் அரசியல்வாதியாக இருக்க கூடாது

Rate this:
adalarasan - chennai,இந்தியா
19-ஆக-201722:57:48 IST Report Abuse

adalarasanவெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஆக-201720:14:20 IST Report Abuse

r.sundaramஆனால் அதிமுக அரசுக்கு எதிராக, அதிமுக எம் எல் எ-இக்களே ஒட்டு போடுவார்களா? அப்படியே ஒட்டு போடாவிட்டாலும், திமுக கூட சேருவார்கள்? அதிமுக உருவானதே திமுகவை எதித்து, அதில் எம் ஜி ஆர் அவர்களும் ஜேஜே அவர்களும் உறுதியாக இருந்தார்கள். அவர்களுக்கு விருப்பமில்லாததை அதிமுக எம் எல் எ-இக்கல் செய்வார்களா? அப்படியே இவர்கள் ஒட்டு போட்டாலும் அப்புறம் இவர்கள் தங்களது தொகுதிக்குள் போக முடியுமா? தினகரன் அவர்களுக்கு நேர் வழியில் மூளை வேலை செய்யாது, அவரது வியூகங்கள் எல்லாம் குறுக்கு வழிதான். அதனால் தான் இந்தனை வழக்குகள் அவர்மேல் இருக்கின்றன. இதில் ஸ்டாலினும், தினகரன் ஆதரவு எம் எல் எ-களும் மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறார்கள்.

Rate this:
20-ஆக-201700:04:10 IST Report Abuse

GunasekaranVenkataramengood...

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
19-ஆக-201719:43:37 IST Report Abuse

PrasannaKrishnanBetter call British to rule India.

Rate this:
மேலும் 128 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement