To win at all costs is new narrative | ‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்

Added : ஆக 19, 2017 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வெற்றி,Win, Victory, தேர்தல் கமிஷனர்,Election Commissioner, ராவத், Rawat, தேர்தல் கமிஷனர் ராவத், Election Commissioner Rawat,புதுடில்லி,New Delhi, ஓம் பிரகாஷ் ராவத் , Om Prakash Rawat, குஜராத்,Gujarat, ராஜ்யசபா தேர்தல்,Rajya Sabha Election,காங்கிரஸ்,Congress, எம்.எல்.ஏ,MLA, தேர்தல் கமிஷன், Election Commission, ஜனநாயகம், Democracy,

புதுடில்லி: "தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்வது, அரசியலில் சாதாரணம்," என, தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத் கூறியுள்ளார்.


பிரச்னை:

சமீபத்தில், குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது, காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தாங்கள் அளித்த ஓட்டு குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் காட்டியது பெரும் பிரச்னையானது. அவர்கள் ஓட்டு செல்லாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்: தேர்தல் கமிஷனர்


சாதாரணம்:

இந்நிலையில், டில்லியில் நேற்று, தேர்தல் கமிஷனர், ஓம் பிரகாஷ் ராவத், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கூறியதாவது: தேர்தல், மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடக்கும்போதுதான், ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். நெறிமுறைகளின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, அனைவரும் விரும்புகிறோம். ஆனால், எவ்வித கொள்கையும், நெறியும் இல்லாமல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம் என்பது, அரசியலில் தற்போது சாதாரணமாகிவிட்டது.


மக்கள் நம்பிக்கை:

தேர்தலில் வெற்றி பெற்றவர், எந்தத் தவறும் செய்யாதவர் என்றும், ஆளுங்கட்சிக்கு தாவுவதால், தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டார், என்றும், மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தவறு என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை, அனைவருக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (55)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
19-ஆக-201720:20:56 IST Report Abuse
r.sundaram மேற்கு வங்கத்தில் தற்போது நடந்த தேர்தல்களை மனதில் வித்து சொல்கிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஆக-201716:23:40 IST Report Abuse
g.s,rajan நம்ம நாட்டுல இந்த அரசியல்வாதிங்க எல்லாம் காந்திக்காகத் தான் இத்தனை பாடு படறாங்க ,ரூபா நோட்டுல வாழுறாரு காந்தி
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஆக-201715:44:27 IST Report Abuse
Endrum Indian சாதாரண மக்களிடம் அதற்கான தீர்வு இல்லை என்று பார்த்தால் தேர்தல் கமிஷன் கூட இப்படி சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை, தேர்தல் கமிஷன் தேர்தல் நடைமுறையை மாற்ற சொல்லி சட்டம் போட முடியுமா? முடியாது? அதையும் செய்வது யார்? பார்லிமென்ட்- எம்.பி. என்னும் விஷக்கிருமிகள் தங்களுக்கு நல்லது செய்யுமே ஒழிய சட்டத்தினால் நாட்டுமக்களுக்கு அல்ல. இது தான் நமது தலைவிதி.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
19-ஆக-201714:49:47 IST Report Abuse
sundaram தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்வது, அரசியலில் சாதாரணம், அப்படீன்னு தேர்தல் கமிஷனர் சொல்றாரு. ஒப்புக்கறோம். அதே நேரத்துல சொந்த நலனுக்காக தேர்தல்ல தோத்தவரை ஜெயிச்சுட்டாருன்னு அவசர அவசரமா அறிவிச்சு கலெக்டரை சர்டிபிகேட்டும் கொடுக்க வச்சது ஒரு தேர்தல் அதிகாரி தானுங்களே. அதையும் நீங்க ஒப்புக்கணுமே.
Rate this:
Share this comment
kathiravan - Chennai,இந்தியா
19-ஆக-201715:50:56 IST Report Abuse
kathiravanஅது எட்டு வருடங்களுக்கு முன். இப்போது இவர் ஆளுங்கட்சிக்கு துளியும் அஞ்சாமல் அவர்கள் செய்யும் தேர்தல் அரசியலை கண்டித்திருப்பதை நாம் மனமார வரவேற்க வேண்டும். குஜராத் ராஜ்ய சபை தேர்தல் முடிவிலேயே இவர் துணிச்சல் வெளிப்பட்டது. 2019 இல் இவர் பாஜகவின் சித்து விளையாட்டுக்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பர் என்று நம்புவோம்....
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
19-ஆக-201714:29:29 IST Report Abuse
B. இராமச்சந்திரன் பாதிக்கு மேற்பட்ட மக்களே ஊழல் வாதிகளாக மாறிப்போய் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. இல்லையென்றால் ஒரு வார்டு கவுன்சிலரை கூட யோக்கியவானாக தேர்ந்தெடுக்க அருகதை அற்றவர்களாக இருப்பார்களா. இதில் யாரை குறை சொல்லி என்ன பயன்.. மக்களின் தரம் என்னவோ அதுதான் மன்னரின் தரமும்..
Rate this:
Share this comment
Cancel
A.Nawab Jhan, Trichy. - Dubai.,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-201714:04:32 IST Report Abuse
A.Nawab Jhan, Trichy. அப்படியென்றால் தேர்தல் கமிஷன் எதற்கு? அப்படியே நீங்கள் வழக்கு தொடுத்தாலும், வழக்கு தீர்ப்பு வரும்வரை, அவர்கள் எல்லாம் ஆண்டு அனுபவித்து செத்தும் போய்விடுவார்கள். பிறகு தீர்ப்பு வரும். புழுத்து போன சட்டங்களை வைத்துக் கொண்டு சாமானிய மக்களைத்தான் தண்டனை பெற்று தரமுடியுமே. பணபலமும்,அரசியல் பலமும் உள்ளவர்களுக்கு. நம் நாட்டு சட்டம் எப்படியும் வளைந்து கொடுக்கும். இந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் உடனடி வழக்கு, தீர்ப்பு, தணடனை என்று சட்டத்தை மாற்றிப் பாருங்கள், நம் நாடே அமைதிப்பூங்காவாக மாறும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஆக-201714:02:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இவர் வாயில் வசம்பு வச்சி தேய்க்க, காவிப்படை காத்துக்கிட்டு இருக்கு. ஏதாவது பழைய வழக்கு, வருமானவரின்னு இவரை அசிங்கப்படுத்த அமீத்சாவின் படை திரண்டு வரும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19-ஆக-201713:58:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "அரசியலில் அது சாதாரணம்'ன்னு அதை ஒத்துக்கலாம்ன்னு சொல்றாரா இல்லை நாம வேடிக்கை பாப்போம்னு சொல்றாரா, இல்லை மக்கள் இதையெல்லாம் பெருசு பண்ணக்கூடாதுங்குறாரா?
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஆக-201713:56:39 IST Report Abuse
Rafi தேர்தல் முறையை மாற்றவேண்டிய கட்டத்தில் நாடு சென்று கொண்டிருக்கு. நம் தேசத்தில் சுயேட்சைகள் வெற்றிபெறுவது இயலாத நிலை. 1 ) மக்கள் கட்சியை பார்த்தே வாக்கு அளிக்கின்றார்கள், வெற்றி பெற்றவர் மரணம்/ ராஜினாமா செய்யும் பட்சத்தில் அந்த கட்சி விரும்பும் நபரை தேர்தல் இல்லாமல் நியமிக்க வேண்டும். இடை தேர்தல் என்கின்ற போது, ஆளும் கட்சிகள் வெற்றிபெற வேண்டி தவறு செய்ய முற்படும்போது தேர்தல் நடத்துபவர்கள் ஆளும் கட்சியினருக்கு அடிபணிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள படுகின்றார்கள். தேவையில்லாமல் அரசு சிலவுகளை தவிர்க்கலாம். மக்கள் 5 ஆண்டிற்க்காக வேண்டி தான் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள். 2 ) மிக பெரிய ஜனநாயக நாட்டில் இருந்து வருகின்றோம் இங்கு பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றோம், அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் மக்களுக்காக வேண்டி நாடு என்ற கோட்பாட்டின் படி விகிதாச்சர அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், அப்போது தான் மக்களும் ஏற்ற தாழ்வு நீங்கி அனைத்து மக்களுக்கும் ஆட்சியில், அரசு பதவிகளில் முறையான பங்களிப்பு கிடைத்ததோடல்லாமல் நம் தேசமும் உண்மையான ஜனநாயகம் கொண்ட நாடென்று சொல்வதற்கு பொருத்தமாக இருக்கும். 3 )வாக்கு இயந்திரத்தின் நம்பக தன்மை மீது மக்களுக்கு கவலையும் சந்தேகமும் இருக்கின்றது ஆகவே பழையபடி வாக்கு சீட்டு முறையை இத்துடன் சேர்த்தே நடத்தலாம், நெருக்கமான வாக்கு வித்தியாசம் இருந்தால் வாக்கு சீட்டின் அடிப்படையில் முடிவை அங்கீகரிக்கலாம். மேலும் அனைத்து மாநிலங்களிலும் 10 சதவிகித தொகுதிகளை வாக்கு சீட்டின் மூலம் முடிவு செய்ய வேண்டும், அதுவும் அனைத்து கட்சியினரின் முன்பாக தேர்தல் முடிந்தவுடன் தொகுதிகளை சீட்டு குலுக்கி போட்டு முடிவு செய்ய வேண்டும்.இப்போதுள்ள உறுப்பினர்களை தவிர்த்து புதிதாக போட்டியிடும் வேட்பாளர்களை குற்ற பின்னணி இல்லாதவர்களாகவும் பட்டதாரிகளாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
கார்த்திகேயன் தேர்தல் சட்ட விதிமுறைகளை மாற்றும் நாள் வெகுதூரம் இல்லை, இன்னொரு அம்பேத்கர் நேசகன் வந்தே விட்டேன் சட்டத்தை முழுவதும் கரைத்து குடித்தபின் தானாக தமிழகத்திற்கு பொற்காலம் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை