'ஒரு மணி நேர' போலீஸ் அதிகாரி ஸ்டீவன் மேத்யூ...| Dinamalar

'ஒரு மணி நேர' போலீஸ் அதிகாரி ஸ்டீவன் மேத்யூ...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


'ஒரு மணி நேர' போலீஸ் அதிகாரி ஸ்டீவன் மேத்யூ...


சென்னை அசோக்நகர் காவல் நிலையத்திற்கு எத்தனையோ அதிகாரிகள், விஐபிக்கள் வந்திருக்கின்றனர் ஆனால் அப்போதெல்லாம் இல்லாத பரபரப்பும் சந்தோஷமும் இப்போது வரப்போகும் அதிகாரிக்காக அனைவரது முகத்திலும் தவழ்ந்தது.

இத்தனைக்கும் வரப்போகும் அந்த அதிகாரி இந்த காவல் நிலையத்தில் ஒரு நாள் இல்லையில்லை ஒரு மணிநேரம்தான் அதிகாரியாகவே இருக்கப்போகிறார், ஆனாலும் தடபுடல் வரவேற்பு வழங்க காவல் நிலையம் தயராக இருந்தது.

யார் அந்த ஒரு மணி நேர அதிகாரி

சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜூவ் தாமஸ்,இவரது மகன் ஸ்டீவன் மேத்யூ(19)மூளை வளர்ச்சி குறைந்தவர்.இவர்கள் கத்தார் நாட்டில் இருக்கும் போது பிரதமர் மோடி அங்கு வந்திருந்தார்.பிரதமருக்கு இந்திய துாதரகம் சார்பில் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளின் நடன வரவேற்பு வழங்கப்பட்டது.

நாட்டியம் முடிந்ததும் பிரதமர் அந்த குழந்தைகளிடம் பிரியமாக பேசி அவர்களது பெயர் விருப்பம் எல்லாம் கேட்டார் அப்போது ஸ்டீவன் மேத்யூ எனக்கு ஒரு நாள் போலீஸ் அதிகாரியாகனும் என்று மழலை மாறாத தன்மையுடன் கூறியிருக்கிறார்.

இப்படி இவர்களுக்குள் நடந்த உரையாடலை குறிப்பிட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தாமஸ் மெயில் அனுப்பினார்.நீங்கள் சென்னை வந்ததும் வந்து சந்தியுங்கள் என்று தாமஸ்க்கு பதில் மெயில் வந்தது.

அதன்படி சென்னை வந்து தன்னை சந்தித்த தாமஸை வரவேற்று உபசரித்த ஆணையர் அசோக்நகர் காவல் நிலையத்தில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மேத்யூ
அதிகாரியாக இருக்க ஏற்பாடு செய்தார். போலீஸ் உடைக்கான அளவு எடுக்கப்பட்டு இரண்டு நாள் முன்னதாகவே வீட்டிற்கு கொண்டுபோய் கொடுத்தனர்.

இரண்டு நட்சத்திரம் கொண்ட சப்-இன்ஸ்பெக்டருக்கான போலீஸ் உடையை போட்ட உடனேயே மேத்யூ முகத்தில் அப்படி ஒரு பிரகாசம், வீட்டிற்குள் தனி கம்பீரத்துடன் வீறு நடை போட்டவர் தான் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்கப்போகும் நாளுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்.

அந்த நாளும் வந்தது

பெற்றோர் துணையுடன் காவல் நிலையத்திற்கு வந்திறங்கிய மேத்யூவை மலர்க்கொத்து கொடுத்து இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் வரவேற்றார் பின் நிலையத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்த அனைவரும் அன்பொழுக கைகொடுத்து வரவேற்றனர், பாராபட்சமில்லாமல் அனைவருக்கும் மேத்யூ சல்யூட் செய்தார்.

அவருக்கான இருக்கையில் அமரவைக்கப்பட்டதும் நிலையத்தில் உள்ள வாக்கி டாக்கிகளை ஆராய்ந்துவிட்டு சிறிது நேரம் காவல் நிலையத்தை சுற்றிப்பார்த்தார் பின் ரோந்து வாகனத்தில் ஏறி ரோந்து பயணம் மேற்கொண்டார், வாகனத்தில் இருந்த மைக் மூலம் பேசினார்.

இப்படி ஒரு மணி நேர அதிகாரியாக வலம் வந்த மேத்யூவின் மனமும் பணிநேரமும் நிறைவடைந்த போது மேத்யூவுடன் அனைவரும் சேர்ந்து குரூப் படம் எடுத்துக்கொண்டனர்.

மேத்யூவின் தந்தை தாமஸ் கூறுகையில் எனது மகனின் நிறைவேற்ற முடியாத நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ளது இந்த உற்சாகத்திலேயே இன்னும் பல வருடங்கள் எங்களுடன் மேத்யூ உலா வருவான், அவனை ஆனந்தப்படுத்திய தமிழக காவல்துறைக்கு மிகவும் நன்றி என்று கூறிய போது அவரது கண்களிலும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கண்களிலும் அப்படியொரு ஆனந்த கண்ணீர்...

-எல்.முருகராஜ்
murugraj@dinamalar.in

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabari - thiruchi,இந்தியா
21-செப்-201702:59:58 IST Report Abuse
sabari ஜெய் மோடி ஜெய் rss
Rate this:
Share this comment
Cancel
kannagi - chennai,இந்தியா
27-ஆக-201715:44:20 IST Report Abuse
kannagi நாட்டில் இன்னமும் ஈரம் இருக்கிறது. ஸ்டீவன் தாமஸுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kalyanakrishnan Ramachandran - Chennai,இந்தியா
25-ஆக-201711:49:40 IST Report Abuse
Kalyanakrishnan Ramachandran கண்கள் பனித்தன இந்த நிகழ்ச்சியை படித்து வாழ்க மனித நேயம்
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
24-ஆக-201713:26:02 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் அருமை
Rate this:
Share this comment
Cancel
Sash - Fahaheel,குவைத்
20-ஆக-201717:18:42 IST Report Abuse
Sash சூப்பரப்பு
Rate this:
Share this comment
Cancel
SINGAM - chennai,இந்தியா
19-ஆக-201718:25:46 IST Report Abuse
SINGAM அப்படியே கட்டுமர கும்பலை ஒரு மணி நேரம் திகாரில் போடவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்